Saturday, July 15, 2023

ஈழநாடு ஆசிரியர் ஹரிஹர சர்மா அவர்கள் உடுப்பிட்டி சிவா அவர்களை எப்போதும் விளம்பர வெளிச்சத்தில் வைத்திருந்தார்

Murugesu Sivasithamparam the 'Lion of Udupiddy': Twenty-first Death  Anniversary Tribute – dbsjeyaraj.com

ராதா மனோகர் : அமரர் உடுப்பிட்டி சிவா அவர்கள் எல்லோரின் நன்மதிப்பையும் பெற்ற தலைவர்
அறுபதுகளில் பிராணதார்தி ஹரிஹர சர்மாவை ஆசிரியராக கொண்டு வெளியான ஈழநாடு தினசரி இதழ் உடுப்பிட்டி எம்பி திரு மு. சிவசிதம்பரம் அவர்களுக்கு கொடுத்த விளம்பரம் சொல்லி மாளாது.
அன்றைய ஈழநாடு முழுக்க முழுக்க தமிழரசு கட்சியின் வெறுப்பு தமிழ் தேசியத்தின் ஊதுகுழலாகவே வந்தது.

ஆனாலும் எஸ் ஜெ வி செல்லநாயகத்திற்கோ அமிர்தலிங்கத்திற்கோ கொடுத்த முக்கியத்துவத்தை விட பல மடங்கு .. ஆமாம் பல மடங்கு திரு மு.சிவசிதம்பரத்திற்கே தவறாமல் கொடுத்து வந்தது.
உடுப்பிட்டி சிங்கம் என்ற பட்டம்கூட ஹரிஹர சர்மாவின் உபயம்தான்!
 
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோது ஒரு சந்தேகம் தோன்றியது
திரு மு சிவசிதம்பரம் அவர்கள் கோயில் மணியக்காரராகவும் அசல் உயர்குடி சைவராகவும் இருந்தமை ஹரிஹர சர்மாவின் தனிப்பட்ட காதலுக்கு காரணமாக இருந்திருக்கும் என்றுதான் தோன்றியது.
அது போகட்டும்

1960 இருந்து 1964 வரை யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பா அவர்களின் பெயரை அந்த ஈழநாடு பத்திரிகையில் பூத கண்ணாடி கொண்டுதான் தேடவேண்டும்.

மிக மிக தவிர்க்கவே முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே கூடுமானவரை ஏ டி துரையப்பா என்று சர்மாவாள் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்.
அந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் நான்கு அல்லது ஐந்து தடைவைகள்தான் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் திரு அல்பிரத் துரையைப்பாவின் பெயரை குறிப்பிட்டிருப்பார் இந்த திருவாரூர் பிளஸ் மயிலாப்பூர் சர்மா அய்யங்கார்வாள்.

அந்த காலக்கட்டங்களில்தான் யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கு உரிய முதல் அனுமதியை திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் ஸ்ரீ மா அம்மையாரின் கல்வி அமைச்சரையும் அழைத்து கொண்டு வந்து ராமநாதன் கல்லூரி பரமேஸ்வரா கல்லூரிகளை பார்வையிட வைத்து அந்தந்த கல்லூரி பதிவேடுகளையே அனுமதி கையெழுத்தை பெற்றிருந்தார்

மேலும் 60 சத்தியா கிரகத்தில் சம்பளத்தை பறிகொடுத்த அத்தனை எம்பிக்களுக்கும் நாடாளுமன்றத்தில் வாதாடி சம்பளத்தையும் பெற்று கொடுத்தார்
இன்னும் பல சம்பவங்கள் அந்த யாழ்ப்பாண எம்பியின் காலத்திலேயே நடந்தது

ஆனால் யாழ்ப்பாண தொகுதியில் அப்படி ஒரு எம்பி இருந்தார் என்ற வரலாறே இருக்க கூடாது என்ற நோக்கத்தோடு  சுதந்திரன் மகேஸ்வர சர்மாவையும் மிஞ்சிய தமிழ் தேசியராக பணிபுரிந்தார் ஹரிஹர சர்மாவாள் அவர்கள்

உடுப்பிட்டி சிவா அவர்களை இந்த ஹரிஹர சர்மா விடயத்தில் விமர்சிக்க முடியுமா தெரியவில்லை
ஆனால் ஹரிஹர சர்மா அவர்கள் உடுப்பிட்டி சிவா அவர்களை எப்போதும் விளம்பர  வெளிச்சத்தில் வைத்திருந்தார் 

No comments:

Post a Comment