![]() |
![]() |
ராதா மனோகர் : இலங்கையில் சுயமரியாதை திருமணம் பற்றிய சில செய்திகள்
திருந்திய திருமணம் என்ற தலைப்பில் 2- 11 - 1952 இல் சுதந்திரன் பத்திரிகையில் வந்திருக்கிறது
சுயமரியாதை திருமணம்
திருந்திய திருமணம் நடராசா - சற்குணம்
கடந்த 20 - 10 - 1952 . கல்முனை மாணிக்கம் ரைஸ் மில் மானேஜரான திரு பொ . நடராஜா (என் பி என் அரசன் ) அவர்களுக்கும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் கனகரத்தினத்தின் மகளும் சித்த வைத்தியர் பரமானந்தத்தின் சகோதரியுமான செல்வி சற்குணம் அவர்களுக்கும் பருத்திதுறை வீதியில் உள்ள 257 ஆம் இலக்க இல்லத்தில் திருந்திய முறையில் பதிவு திருமணம் நடைபெற்றது .
இந்த சீர்திருத்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் வாழ்த்து செய்திகள் அனுப்பியவர்களுக்கும் மணமக்கள் இதன் மூலம் நன்றி தெரிவிக்கின்றனர்
16 =- 7- 1962 இலங்கை - (சுயமரியாதை திருமணம்)
சீர் திருத்த திருமணம்
அகில இலங்கை பகுத்தறிவு இயக்க உறுப்பினரான,
வெள்ளவத்தையை சேர்ந்த திரு ம. கணபதிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சே .இராசாத்திக்கும்
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் சீர்திருத்த முறையிலே திருமணம் நடைபெற்றது
அகில இலங்கை பகுத்தறிவு இயக்க பொதுச்செயலாளர் திரு ஆ வேலாயுதம் அவர்கள் திருமணத்தை நடத்தினார்.
திரு .ஆர் .சிவகுருநாதன், அகில இலங்கை பகுத்தறிவாளர் சங்க தலைவர் திரு .த.பொ.ந . அரசன் . திரு மா கா ஈழவேந்தன் . சங்கம் ஆசிரியர், திரு .மா.சே அருள் ஆகியோர் சீர்திருத்த திருமணத்தை ஆதரித்து சொற்பொழிவாற்றி மணமக்களை வாழ்த்தினர்.
திரு த பொ ந அரசன் மணமக்களை வாழ்த்துகையில்,
நம் பொன்னான இனிய இன்பத்தமிழ் மொழியிருக்க புரியாத சம்ஸ்கிருத மொழியில் அக்கினி முன் அமர்ந்து அம்மி மிதித்து அருந்ததி என்று ஆகாயத்தை பார்க்கும் புரியாத சடங்குகள் அவசியமா?
இங்கே நடைபெறும் எளிய தமிழ் முறை திருமணம் எல்லோருக்கும் புரிந்ததல்லவா?
பண்டை தமிழகத்தில் .. ஆரியம் தமிழகத்திற்குள் புகுவதற்கு முன்பு இத்தகைய திருமணங்கள்தான் நடந்தன.
தமிழ் மரபும் இதுதான் என்று சொன்னார்
சுதந்திரன் பத்திரிகை 8 7 1962
பி கு : திரு நடராசா சற்குணம் தம்பதிகளின் சுயமரியாதை திருமணம் தம்பதிகளின் மாலை மாற்றலும் ஒரு பெரியவரின் சொற்பொழிவோடும் நடந்தாக இவர்களின் நெருங்கிய உறவினர்கள் மூலம் தெரியவந்தது. .
அந்த காலக்கட்டங்களில் பல சுயமரியாதை திருமணங்கள் பற்றிய வாய்மொழி செய்திகள் உள்ளன வரும் காலங்களில் அவை பற்றிய போதிய ஆதாரங்களோடு எழுத முயற்சி செய்வேன்
ஐம்பதுகளில் கூட இலங்கையில் சுயமரியாதை திருமணம் நடந்திருக்கிறது
ஆனால் தற்போது சுயமரியாதை திருமணம் என்றால் என்னவென்று கூட தெரியாத ஒரு நிலைதான் உள்ளது.
![]() |
No comments:
Post a Comment