Monday, July 10, 2023

இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமைக்கு வேட்டு வைத்த இடதுசாரிகள்

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிபோன வரலாற்றில் மீண்டும் மீண்டும் பச்சை பொய்களையே வரலாறாக கட்டமைக்கிறார்கள்! 

உண்மை வெளிவந்தால் பலரின் அரசியலும் சித்தர்களும் நிரந்தரமாக ஆட்டம் கண்டுவிடும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் இந்த இருட்டடிப்பு தொடர்கிறது.

1930 களிலேயே இலங்கையில் இனமுரண்ட்பாடுகள் தோற்றம் பெற்றன.

ஆனால் தற்போது எல்லோரும் கூறுவது போல அந்த முரண்பாடுகள் தமிழ் சிங்களம் என்ற ரீதியில் இருக்கவில்லை.

தென்னிலங்கையில் தோட்ட காணிகளை கைப்பற்றிய காலத்துவவாதிகள் அவற்றில் பணியாற்றுவதற்கு தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த போதே இந்த முரண்பாடுகள் முளைவிட்ட தொடங்கியது.

கொழும்பு துறைமுகத்திலும் கண்டி கொழும்பு காலி போன்ற பெருநகரங்களிலும் சிறு சிறு உள்ளூராட்சி மன்றங்களிலும் துப்பரவு பணியாளர்கள் உட்பட தொண்ணுறுவீதமான வேலைகளுக்கு இந்திய வம்சாவளி மக்களே பெரிதும் பயன்படுத்த பட்டனர் 

உள்ளூர் மக்களை விட குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தென்னிந்திய தொழிலாளர்கள் தயாராக இருந்தனர்.

1960 கள் வரையும் கூட தென்னிந்தியாவில் இருந்து மக்கள் வேலை தேடியும் வியாபார காரணங்களாலும் மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். 

எல்லா மக்களும் 200 வருடங்களுக்கு முன்பு வந்து குடியேறிவர்கள் அல்ல!

இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு தென்னிந்திய தொழிலாளர்களும் வியாபாரிகளும் மாத்திரம் அல்லாது வடஇந்திய முதலாளிகளும் பெரும் பங்காற்றி உள்ளனர் 

இன்றும் கூட இந்நிலை ஓரளவு நிலவுகிறது.

இரண்டாவது உலக போர் முடிவுற்ற காலத்தில்  உலகை தூங்க விடாமல் செய்த முக்கிய பிரச்சனையாக இருந்தது கம்யூனிச சர்வாதிகார பரவலாகும்!

மேற்கு நாடுகளுக்கும் கம்யூனிச நாடுகளுக்கும் இடையில் வாழ்வா சாவா என்ற அளவில் போர் சூழ்நிலை நிலைய காலமது! 

தெற்காசியாவில் ஜனநாயக பாதையில் பயணிக்க தொடங்கிய இந்திய ஒன்றிய அரசும் பாகிஸ்தான் நேபால் போன்ற நாடுகளின் மேற்கு நாட்டு ஆதரவும் தெற்காசியா ஒரு கம்யூனிச ஆபத்தில்லாத துணைக்கண்டமாக கருதப்பட்டது!

ஆனால் இந்த ஜனநாயக வெளிக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக இலங்கையில் கம்யூனிச அபாயம் உருவானது! 

சுதந்திர இலங்கையில்  1948 இல் நடந்த முதல் தேர்தலில் ஏறக்குறைய சரி பாதி இடங்களையே மேற்கு நாடுகளின் ஆதரவு சக்தியான  ஐக்கிய தேசிய கட்சியால் கைப்பற்ற முடிந்தது.

எதிர்க்கட்சி வரிசையில் ஏராளமான இடதுசாரி கட்சிகளும் இடது சாரி ஆதரவு பெற்ற சுயேட்சைகளும் தெரிவாகி இருந்தார்கள்! ஆனால் இந்த இடது சாரி கட்சிகளிடையே நடந்த குடுமி பிடி சண்டைகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

இந்த தேர்தல் முடிவுகள் இந்தியாவை பயமுறுத்தியது.

இந்திய வம்சாவளி மக்கள் மட்டுமல்லாது பூர்வீக இலங்கை தமிழர்களும் தென்னிலங்கையில் தலைநகரிலும் இடது சாரி கட்சிகளுக்கே வாக்களித்தனர் 

பாரம்பரியமாக பௌத்த கோட்பாடுகளை கொண்டிருந்த சிங்கள மக்கள் இடது சாரி கருத்துக்களை பௌத்தத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகவே கருதி இருந்தனர்.

சிங்கள பௌத்த மக்களிடையே பெறமுடியாமல் போன வாக்கு வங்கியை மலையக தோட்ட தொழிலாளர்களிடம் இருந்தும் இதர சிறுபான்மை மக்களிடம் இருந்தும் இடதுசாரிகள் பெற்று கொண்டனர் 

சிங்கள பெரும்பான்மை மக்களின் சித்தாந்த எதிரிகளாக மலையக மக்களும் இதர சிறுபான்மை மக்களும் இடது சாரிகளால் கட்டமைக்கப்பட்டனர்!

சிங்கள பெரும்பான்மை மக்களின் சுதந்திரத்திற்கு  ஆபத்து விளைவிப்பவர்களாக சிறுபான்மை மக்களை  தேர்தல் களத்தில்  கொண்டுபோய் நிறுத்தியமை வரலாற்றில் இலங்கை இடதுசாரிகள் இழைத்த மாபெரும் தவறாகும்!

மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பல பிரச்சனைகள் இருந்தாலும் கம்யூனிசம் பரவிடாமல் தெற்காசியாவை பாதுகாக்கும் விடயத்தில் இந்தியாவுக்கு தோளோடு தோள் கொடுக்கும் நண்பனாகதான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எப்போதும் செயல்பட்டன. இன்றுவரை இந்த நிலையில் ஒரு மாற்றமும் இல்லை!

இந்திய ருஷ்ய உறவு என்பது இந்த விடயத்தில் தடையில்லை! 

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்தாலும், \

 In the 1950s, the United States helped India develop nuclear energy under the Atoms for Peace program.  The United States built a nuclear reactor for India, provided nuclear fuel for a time, and allowed Indian scientists study at U.S. nuclear laboratories.

1950 களிலேயே அணு சக்தி மின்நிலையைத்தை அமெரிக்காவே வழங்கியது என்பது கவனத்திற்கு உரியது! 

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் பொருந்திய இந்தியாவே கம்யூனிச ஆபத்தில் இருந்து சிறு நாடுகளை பாதுகாக்கும் என்பதே மேற்கு நாடுகளின் கோட்பாடாகும்! 

இலங்கையில் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து பலம் பெறக்கூடிய அரசியல் சூழ்நிலைகள் பல விதத்திலும் தெளிவாக தென்பட்டது.

இலங்கை இடதுசாரிகளின் மிகப்பெரும் ஆதரவு தளத்தை தகர்க்க வேண்டிய தேவை இலங்கை பெரும்பான்மை மக்களுக்கும் மேற்கு ஜனநாயக நாடுகளுக்கும் எல்லாவற்றையும் விட இந்தியாவுக்கு அதிகமாக இருந்தது! 

மொத்தத்தில் கம்யூனிஸ்டுகளின் அரசியல் சாகசத்திற்கு பலியானார்கள் மலையக இந்திய வம்சாவளி மக்கள்!

இந்த நிலை இன்றுவரை ஓரளவு தொடருக்கிறது என்றும் கூட கூறலாம்.

1971 ஆம் ஆண்டு நடந்த ஜேவிபி அமைப்பின் இடது சாரி ஆயுதபுரட்சியின் போது இந்திய படைகளின் கட்டுப்பாட்டில் கொழும்பு நகரமும் துறைமுகமும் இருந்ததாக செய்திகள் உண்டு!

அந்த காலக்கட்டங்களில் ஜேவிபியின் செல்வாக்கு மலையக பகுதிகளில் இருந்தது என்பது ஒன்றும் ரகசியம் அல்ல.

சிங்கள மக்களிடையே உருவான பல இடது சாரி தலைவர்களும் காலப்போக்கில் சிங்கள இனவாதிகளாகவே மாறியது இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விடயமாகும்.

தனிச்சிங்கள கோஷத்தோடு பதவிக்கு வந்த எஸ் டபிள்யு பண்டாரநாயக்காவோடு இடதுசாரிகள் கொண்டிருந்த புரிந்துணர்வு சற்று சிந்தனைக்கு உரியதாகும்.

1956 ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கை கம்யூனிஸ்டு கட்சி ஒரு கூட்டணி உடன்பாடு கொண்டிருந்தது  ஆனால் அதை வெளிப்படையாக அறிவிக்க திராணி அற்று அது ஒரு கூட்டணி ஒப்பந்தம் அல்ல அது வெறும் தொகுதி அடஜஸ்ட்மெண்டு என்று கூறியது ..அதாவது சில தொகுதிகளில் போட்டியிடாமல் பண்டாரய்கவின் கட்சியோடு செய்த நோ கொன்டெஸ்ட் அக்ரீமெண்ட் என்றார்கள்! எப்பேர்ப்பட்ட சித்தாதம்?

 

 


 

 

No comments:

Post a Comment