Wednesday, July 19, 2023

பண்டா செல்வா புரிந்துணர்வு அரசியலும் பரஸ்பர இனவாத அரசியல் முன்னெடுப்பும்

சுதந்திர இலங்கையின் முதல் அமைச்சரவையில் ( Solomon West Ridgeway Dias Bandaranaike) சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா

திரு பண்டாரநாயகா அவர்கள் தனது 27 வயதில் இலங்கை தேசிய காங்கிரஸ் இல் இணைந்து 1926 ஆம் ஆண்டு கொழும்பு நகரசபைக்கு அங்கத்தவராக தெரிவானார்.

1936 ஆம் ஆண்டு சிங்கள மகாஜன சபா என்ற சிங்கள தேசிய இயக்கத்தை நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் 1931 - 1947 தேர்தல்களில் வியாங்கொடை தொகுதியில் வெற்றி பெற்று  உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார் 

பின்பு 1947 ஆம் ஆண்டு தனது சிங்கள மகாஜன சபையை டி எஸ் சேனநாயக்க தலைமையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்தார்.

சுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தலில் 1947 இல் அத்தனகல தொகுதியில் வெற்றிபெற்று டி எஸ் சேனநாயக்காவின் அரசில் சபை தலைவராகவும் உள்ளூராய்ச்சி மற்றும் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.

1951 இல் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை நிறுவி  எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்,

இவர் நிறுவிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு வகையான இடது சாரி கொள்கைகளை கொண்டிருந்தாலும் கூடவே சிங்கள இனவாத கட்சியாகவும் காட்சி அளித்தது.

1952 இல் நடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியானது  பல கட்சிகளோடு சேர்ந்து மகாஜன எக்சத் பெரமுன என்ற பெயரில் போட்டியிட்டு ஒரு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக தெரிவானது 

. திரு பண்டாரநாயக்க எதிர்க்கட்சி தலைவரானார்.

இந்த மகாஜன எக்சத் பெறமுண அல்லது மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கட்சியானது மேலே குறிப்பிட்டது போல இடதுசாரி கொள்கைகளையும் தீவிர சிங்கள தேசியவாதத்தையும் கலந்து நாட்டுக்கு ஏற்ற சோசலிசம் போல ஒரு அரசியலை முன்னெடுத்தது.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதுவரையில் ஒரு பலமான எதிர்க்கட்சி இருக்கவில்லை . ஏராளமான இடதுசாரிகளும் சுயேட்சைகளும் சேர்ந்த கலவையாகவே எதிர்தரப்பு இருந்தது 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் காங்கிரசும் ஐக்கிய தேசிய கட்சியும் பெரும்பாலான வாக்குவங்கியை கொண்டிருந்தன.

வெறும் சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொண்ட பண்டாரநாயக்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் வடக்கு கிழக்கு வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சியிடம்  இருந்தும் தமிழ் காங்கிரஸ் கட்சியிடம்  இருந்தும் பிரிக்க வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு நகர்ந்தார்.

மறு புறத்தில் வடக்கு கிழக்கில் மிக பலம் வாய்ந்த கட்சியாக இருந்த தமிழ்காங்கிரஸில் இருந்து செல்வநாயகத்தையும் நாகநாதனையும் பிரிக்கும் வேலையையும் பார்த்தார். 

திரு ஜி ஜி பொன்னம்பலத்தால் மலேசியாவில் இருந்து அழைத்துவரப்பட்டு எம்பியாக்கப்பட்ட செல்வநாயகமும் சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்டு செனட்டராகவும் நியமிக்கப்பட்ட நாகநாதனுக்கும் ஒரு போதும் திரு ஜி ஜி பொன்னம்பலத்தை மீறி அரசியலில் மின்ன முடியாத நிலை இருந்தது.

இந்த இருவருக்கும் சரியாக தமிழும் தெரியாது .. எந்த கோணத்தில் பார்த்தாலும் திரு ஜி ஜி பொன்னம்பாத்தை பார்த்து பெருமூச்சு விடுவதை தவிர வேறு அரசியல் செய்யமுடியாத ஆற்றாமை நிறைந்திருந்தது.

திரு பண்டாரநாயக்காவின் குடும்ப டாக்டராக இருந்தார் திரு நாகநாதன் (இவர் பிரகாத்தில் செல்வநாயகத்தின் சம்பந்தியுமானார்)    இந்த இருவரும் தென்னிந்திய திருச்சபைக்கு நெருக்கமானவர்கள்.

சிங்கள மக்களிடையே தீவிர சிங்கள பற்றாளனாக தன்னை இனம் காட்டிக்கொண்ட பண்டராயனாக அரசியலில் பெற்றுக்கொண்டிருந்த வெற்றிகளால் கவரப்பட்ட செல்வநாயகமும் நாகநாதனும் அதே பாணி தீவிர மொழி அரசியலை தமிழர்களிடையே முன்னெடுத்தனர் 

இவர்களின் தீவிர தமிழ் தேசிய அரசியலுக்கு தமிழ்நாட்டில் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த இத்தி எதிர்ப்பு போராட்ட செய்திகளும் பரப்புரைகளும் மிகப்பெரும் பிரசார பயன்பட்டன.

தமிழரசு கட்சியே  திரு பண்டாரநாயக்கவின் ஆலோசனையில் உதித்ததுதான் என்று அந்த காலக்கட்டங்களில் உலாவிய செய்திகள் ஒன்றும் பரம ரகசியம் அல்ல.

1956 தேர்தலுக்கு முன்பாக பண்டாரநாயகவும் செல்வநாயகமும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தனர் . மொழி அதிகாரப்பகிர்வு தொடர்பாக இந்த ஒப்பந்தம் எதுத்தப்பட்டதாகும் பின்பு பதவிக்கு வந்த பண்டாரநாயக்க அதை கிழித்து எறிந்து விட்டதாகவும் கூறப்பட்டது 

அத்தேர்தலுக்கு  முன்பு இவர்கள் பேசிக்கொண்டனர் ஆனால் எழுத்தில் அந்த ஒப்பந்தம் எழுதப்படவில்லை .

பண்டாரநாயக்க மீது செல்வநாயகத்திற்கு அவ்வ்ளவு நம்பிக்கை.

இதை அறிந்து கொண்ட திரு வி நவரத்தினம் ( பிற்காலத்தில் சுயாட்சி கழக தலைவர்) செல்வநாயக்கத்தோடு வாக்குவாதப்பட்டார்.

ஒரு முக்கியமான அரசியல் உடன்படிக்கையையே வெறும் வாய்ப்பேச்சே போதும் என்று மக்களுக்கு நாம் எப்படி சோலா முடியும்?  விபரங்களை எழுதி இருபகுதியும் கையெழுத்து இடவேண்டாமா என்று கேட்டார்.

பதில் சொல்லமுடியாமல் திணறிய செல்வநாயகம் அப்படி என்றால் நீர் போய் எழுதி கையெழுத்தையும் பெற்று கொண்டு வாரும் என்று பண்டாரநாயக்கவிடம் திரு வி நவரத்தினத்தை அனுப்பினார்.

இதிலிருந்து பண்டா செல்வா நட்பு என்பது எவ்வளவு ஆழமானது என்பதை புரிந்து கொள்ளலாம்..

பண்டாரநாகவிடம் சென்று ஒப்பந்தத்தை கேட்டார் திரு வி நவரத்தினம். அதற்கு பண்டாரநாயக்க நீர் வேண்டுமென்றால் எழுதி தாரும் நான் கையெழுத்திடுகிறேன் என்றார் . அப்படிதான் பண்டாரநாயக்கவின் கையெழுது பெறப்பட்டது  

அதில் செல்வாவும் கையெழுதிட்டறார் என்பது சரியாகத் தெரியவில்லை.

56 தேர்தலில் சிங்கள பகுதிகளில்  நாம் ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலங்களில்  தனி சிங்கிள சட்டத்தை அமுல் படுத்துவேன் என்று பண்டாரநாயக்கவும் பரிவாரங்களும் முழங்கினார்கள்  வெறுப்பு அரசியல் பேயை கட்டவிழ்த்து விட்டார்கள் 

தமிழ் பகுதிகளில் செல்வநாயகத்தின் தமிழரசு கட்சியோ பண்டாவுக்கு சற்றும் சழைக்காத அளவு உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று தமிழ்நாடு அரசியல் முழக்கங்களை வடக்கு கிழக்கில் பேசி பேசி உசுப்பேற்றினார்கள் 

முடிவில் 56 தேர்தலில் சிங்கள பகுதிகளில் பண்டாரர்நாயகவும் தமிழ் பகுதிகளில் செல்வநாயகமும் பெரு வெற்றி பெறறார்கள்  .. 

அமைதியான வாழ்வை விரும்பிய முழு இலங்கை மக்களும் தோல்வி அடைந்தார்கள்.

இனவாத அரசியலில் பெருவெற்றி பெற்ற இரு இனவாத அரசியல்வாதிகளும் வெறுப்பு அரசியலை தொடர்ந்தார்கள்.

1 comment:

  1. மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டிய வரலாற்று மறைப்புகள்

    ReplyDelete