Saturday, August 19, 2023

அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றவேண்டிய தேவை எந்த கட்சிக்கு இருந்தது? தமிழரசு கட்சிக்கு!

 ராதா மனோகர் : 1965 ஆண்டு தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை தரவில்லை
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஏறக்குறைய சம பலத்தில் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் ஸ்ரீமாவோ அம்மையாரும் டட்லி சேனாநாயவும் தமிழரசு கட்சியின் (14ஆசனங்கள்) ஆதரவை கோரினார்கள்.
தமிழரசு கட்சியினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை கொடுத்தார்கள்  அதற்கு ஏதோதோ காரணங்களை கூறினார்கள் பின்பு வழமை போல ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றி விட்டதாக கூறி வெளியே வந்தார்கள்
இது தமிழ் தேசிய அரசியலின் வழமையான விக்டிம் டிராமாதான்
ஆனால் உண்மையான காரணம் வேறு!
 தமிழரசு கட்சி டட்லியோடு சேர்ந்து ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் அப்போது திரு அல்பிரட் துரையப்பாவின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு போயிருந்ததுதான்.

1965 இல் ஸ்ரீமாவோடு சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தால் அப்போதே யாழ்ப்பாண பல்கலை கழகத்தை ஸ்ரீமாவோ அம்மையார் நிறுவியிருப்பார்.
ஏனெனில் ஏற்கனவே அவர் யாழ் எம்பி திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ்ப்பாண பல்கலை கழக கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை (1964) எடுத்திருந்தார்
கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமத்தை திரு அல்பிரட் துரையப்பாவோடு ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் பார்த்து அவரை பல்கலை கழகத்திற்கு ஏற்றவைதானா என்று அறிந்து கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலை கழகம் நிச்சயம் வரும் ஆனால் அதன் பெயர் புகழ் எல்லாம் திரு அல்பிரட் துரையப்பாவுக்கே போய் சேரும் என்று செல்வநாயகம் கோஷ்டியினர் பயந்தனர்.என்ன காரணம் கொண்டும் யாழ்ப்பாண பல்கலை கழகம் அமையவே கூடாது என்று எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் தமிழரசு கட்சி கருதியது.
யாழ்ப்பாணத்தில் எந்த காலத்தில் பல்கலை கழகம் அமைந்தாலும் அது அல்பிரட் துரையப்பா போட்ட பிள்ளையார் சுழியில் இருந்துதான் தொடங்கும் என்பது வரலாறு
இந்த வரலாறு மக்கள் அறிந்தால் அல்பிரட் துரையப்பாவின் அரசியல் தங்களுக்கு மிக பெரிய சவாலாகி விடும் எனவே பல்கலைக்கழகம் உருவாகாவிட்டாலும் தமிழரசு கட்சிக்கு யாழ்மாவட்டத்தில் ஆபத்து வந்து விடக்கூடாது என்று  தமிழரசு கட்சி மும்மரமாக வேலை செய்ததது.
அதற்காக திருகோணமலையில் தமிழ் பல்கலை கழகம் என்றொரு நாடகத்தை அரங்கேற்றி அதற்காக பணமும் சேர்த்தார்கள்  நிலமும் வாங்கினார்கள்  .. அவை எங்கே போனது என்று இன்றுவரை எவருக்கும் தெரியவில்லை
இதற்காகவும் டட்லியோடு சேர்கிறோம் என்று கூறிக்கொண்டு டட்லியின் ஆட்சியில் பங்கு பற்றினார்கள்
கொஞ்சம் கூட வெட்கப்படாமல்  திருச்செல்வத்தை அமைச்சரும் ஆக்கினார்கள்   
திரு ஜி ஜி பொன்னம்பலமும் டட்லி அரசுக்கு ஆதரவளித்தனர்   ஆனால் பிரதமர் டட்லி சேனநாயக்க  அமைச்சு பதவி அளிக்க முன்வந்த போதும் அதை ஏற்க மறுத்தார்.
தான் அமைச்சு பதவிக்கு ஆசைப்பட்டேன் என்று துரோகி பட்டம் சூட்டிய தனிக்கட்சி தொடங்கிய எஸ் ஜெ வி செல்வநாயகம் கட்சி அமைச்சு பதவிக்கு ஏற்றமைக்கு  என்ன காரணம் சொல்ல போகிறார்கள் என்று மக்கள் கேட்கவேண்டும் என்கிறார்
உண்மையில் தமிழரசு கட்சியின் நாகநாதன் திருச்செல்வம் இன்னும் ஒருவர் உட்பட மூவர் அமைச்சராக ஆசையில் இருந்தார்கள்.
இவர்களை அமைச்சராக செல்வநாயகமும் தயாராக இருந்தார் .
கட்சிக்குள் சதா கேள்வி கேட்டு தொந்தரவு செய்யும் ஊர்க்காவல் துறை எம்பி சுயாட்சி நவரத்தினத்தின் கடுமையான எதிர்ப்பிற்கு பின்பு எம்பிக்கள் பதவி ஏற்கவேண்டாம் செனட்டர் திருச்செல்வத்தை மட்டும் அமைச்சராகுவோம் என்று கூறி நவரத்தினத்தை செல்வநாயகம் அமைப்படுத்தினர்
இதன் காரணமாகவே 1968 இல் சுயாட்சி நவரத்தனத்தை கட்சியை விட்டே நீக்கினார்கள்
ஏனெனில் 1970 தேர்தலின் பின் கூட எவரையும் அமைச்சராக பதவி ஏற்க இவர் விடமாட்டார் அல்லவா?

இதன் மூலம் (ஸ்ரீமாவை ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்காமல்)
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அமைவதை செல்வநாயகம் கட்சியினர் தடுப்பதில் வெற்றி கண்டனர்.
1970 இல் மீண்டும் பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ அல்பிரட் துரையப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தை அமைத்தார் பின்பு அது யாழ்ப்பாண பல்கலை கழகமாகியது  

யாழ்ப்பாண பல்கலை கழக திறப்பு விழாவுக்கு வந்த ஸ்ரீமாவோடு கறுப்புக்கொடி காட்டி தெருக்களில் டயர்களை போட்டு எரித்து வெறுப்பு அரசியலின் கோரமுகத்தை காட்டினார்கள்
தங்களுக்கு தொடர்ந்து வாக்கு போடும் மக்களின் பல்கலை கழக கனவின் மீது இந்த வெறுப்பு அரசியல் கூட்டத்திற்க்குதான் எவ்வளவு கரிசனை?
செல்வநாயகத்தின் அரசியல் முழுக்க முழுக்க இது போன்ற துரோஹிஸ சம்பவங்கள் ஏராளம் உள்ளது!  
ஏற்கனவே துரையப்பாவின் வாக்குவங்கியானது தமிழரசு கட்சிக்கு தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக இருந்தது
இதற்கு மேலும் அல்பிரட் துரையப்பா வளர்ந்தால் தங்களின் அரசியல் கேள்வி குறியாகும் அல்லவா?
அதனால்தானே அவரை பின்பு கொன்றார்கள்

No comments:

Post a Comment