Wednesday, June 21, 2023

1933 இல் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவில் புதுசேரிக்கான பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் இருந்து வித்தகம் என்ற பத்திரிக்கை வெளி வந்திருக்கிறது

May be an image of text that says 'Û. VITTAGAM JAFFNA CEYLON. JOURNAL HEBDOMADAIRE PARAISSANTLE JEUDI வித்தகம் வியாழக்கிழமை தோறும் வெளிவருவது நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது, குரள். VOL,1 புதுவை, ஸ்ரீமுகளுர மார்கழி மா கச No. 22C Cloudy'

ராதா மனோகர்  : வித்தகம்" என்ற வாரப்பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இருந்து இற்றைக்கு தொண்ணுறு ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது.
!933 ஆம் ஆண்டில் இருந்து 1936 ஆம் ஆண்டுவரை மூன்று ஆண்டுகள் தங்குதடையின்றி வெளிவந்திருக்கிறது
இதில் மிக சுவாரசியமான ஒரு செய்தி இருக்கிறது
அன்றைய (பாண்டிசேரி) புதுவை மாநிலத்தின் தனித்தன்மையோடு இப்பத்திரிகை வெளிவந்திருக்கிறது
இப்பத்திரிகை பிரெஞ்சு அரசாங்கத்தின் பதிப்பாகவே யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்திருக்கிறது என்பது முக்கியமாக கவனிப்படவேண்டிய வரலாற்று செய்தியாகும்
பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாக இருந்த புதுவையின் ஒரு தமிழ் ./ பிரெஞ்சு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது
பிரெஞ்சு இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இருந்த இந்த தொடர்பு பற்றி விரிவான செய்திகள் இன்னும் அறியப்படவில்லை  
இப்பத்திரிகை தமிழ்நாட்டில் பதிப்பிப்பதில் எதாவது சிக்கல் இருந்திருக்க கூடும்
ஆங்கில காலனியாக தமிழ்நாடு அப்போது இருந்தமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம்
பிரெஞ்சு ஆங்கில காலனி நிலப்பரப்புக்களில் இருந்த முறுகல் நிலையை கருத்தில் கொண்டு இதை நோக்கலாம் என்று கருதுகிறேன்


காரணம் எதுவாக இருந்தாலும் புதுவை வரலாற்று செய்திகளில் யாழ்ப்பாணத்திற்கும் ஒரு பக்கம் இருக்கிறது என்பது இந்த வித்தகம் என்ற வாரப்பத்திரிகை மூலம் தெரியவருகிறது

No photo description available.

No comments:

Post a Comment