Sunday, April 2, 2023

திராவிட பிரகாசிகை ஆம் ஆண்டு - யாழ்ப்பாணம் திரு சபாபதி நாவலர்!

ராதா மனோகர்
:  திராவிட பிரகாசிகை . தமிழ் இலக்கண நூல்.1899 ஆண்டு!
தமிழ் மொழியின் முக்கியமான இந்நூலின் பெயர் திராவிட பிரகாசிகை
இந்நூலை எழுதியவர்  யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த திரு சபாபதி நாவலர் அவர்களாகும். .
தற்போது பலரும் இலங்கையில் திராவிடம் என்ற சொல்லே இல்லை  
அது என்னவென்று கூட பலருக்கும் தெரியாது என்றெல்லாம் கூறுகிறார்கள்.
வரலாறு தெரியாத ஒரு சமூகத்தை கட்டமைத்ததுதான் இவர்களின் சாதனை
இன்றும் கூட தமிழை காவல் காத்து கொண்டிருப்பது திராவிடம் என்ற அடையாளம்தான்
இது வெறும் நிலம் சார்ந்த விடயம் மட்டுமல்ல
ஆரிய ஜாதீயம் நுழைவதற்கு முன்பிருந்த நிலத்தின் அடையாள பெயர் திராவிடம்
இதை சரியாக இனம் கண்டுகொண்டதனால்தான்,
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  திரு சபாபதி நாவலர் போன்ற முது பெரும் தமிழறிஞர்கள் தமிழ் இலக்கண நூலுக்கு திராவிட பிரகாசிகை என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
அந்த நூல் பற்றிய சிறுகுறிப்பு:
கணபதி துணை   திருச்சிற்றம்பலம் திருவாவடுதுறை
மாதவ சிவஞான யோக சுப்பிரமணிய தேசிக சுவாமிகள்  அருளுபதேசம் பெற்று அவ்வாதீன வித்தியாசிரோன்மணியாய் விளங்காநின்ற

சபாபதி நாவலரவர்களால் இயற்றி சித்தாந்த வித்தியாநுபாலனந்திரசாலையில் அச்சுதாபிக்கப்பட்டது  
சாலிவாகன சக வரு ..ம அ  உ க  விகாரை வருஷம் கார்த்திகை மீ
1899 copy  rights reserved
திராவிட பிரகாசிகை நூல் நான்கு  பதிப்புக்கள் வெளியாகி உள்ளது
இதில் இரண்டாவது பதிப்பின் முன்னுரையில் உள்ள சில விடயங்களை குறிப்பிடுவது ஒரு முக்கியமான உசாத்துணையாகும்.
சிவமயம்
திராவிட பிரகாசிகை
திருவாவடு துறையாதீன மகாவித்துவான் வடகோவை (கோப்பாய் வடக்கு)
சபாபதி நாவலர் அவர்கள் இயற்றியது.
அன்னாரின் மருகர்
அ .சிவகுருநாத பிள்ளை பிரசுரித்தது.
சென்னை சாது அச்சுக்கூடம்  பிரபவ ஸ்ரீ  வைகாசி மீ
1927 .
தமிழ் இலக்கிய இலக்கண சாத்திர மெய் வரலாறுகளையெல்லாம் இனிது பட எடுத்து போதிப்பது இத்திராவிட பிரகாசிகை!
இது அருந்தமிழ் அறிஞரால் மருந்தென போற்றப்படுவது.
இது திருக்கயிலாய பரம்பரை திருவாவது துறையாதீன வித்துவசிரோன்மணியும் எனது நன்மாமனாருமாகிய  ஸ்ரீ ல ஸ்ரீ சபாபதி நாவலரவர்களால் இயற்றப்பெற்று தமது சித்தாந்த வித்யாநுபாலன     அச்சுயந்திர சாலையில் சாலிவாகன சக க அ உ இல் செல்லா நின்ற விகாரி வருஷ ஸ்ரீ கார்த்திகை மீ (1899) பதிப்பித்து வெளியிடப்பெற்றது.


இந்நூல் பிரதிகள் காலாந்தரத்தில் கிடைப்பதருமை ஆதல் குறித்து அதனை மீட்டும் அச்சியற்றி வெளியிட்டு தமிழுலகிற்கு பயன்படுத்த பன்னெடுங் காலமாக கருதியிருந்தேன் .
இதனை அச்சிடும் விஷமாக நாவலரவர்கள் உறவினர்களான வடகோவை . வ. சதாசிவம் பிள்ளை,. செ. முத்துக்குமார பிள்ளை ஆகிய இருவரோடும் ஆலோசித்தேன் .
இந்நூலுக்கு முகவுரை எழுதியருளிய கருணை வள்ளலும் புலோலி நகர்(புலோலி யாழ்மாவட்டம்) ஸ்ரீமத் க.சிவபாதம் சுந்தரம் பிள்ளை (B.A) அவர்கட்கு யான் என்றும் கடமைப்பட்டுளேன்


No comments:

Post a Comment