Saturday, April 18, 2026

திரு.ஆலாலசுந்தரம் திரு. தர்மலிங்கம் - அந்நியரின் கூலிப்படைகளான உள்ளூர் ஆயுதக்குழுக்களால் கொலை செய்யப்பட தலைவர்கள்

 


ராதா மனோகர்
: 1985 செப்டம்பர் 5 ஆம் தேதி  இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் 
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் 
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள் 
குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள் 
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின்  தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள் 
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது?
இயக்கங்களை சந்தேக படலாம்.
அல்லது இயக்கங்களை முன்னே தள்ளி தங்கள் காரியத்தை முடித்து கொள்ள விளைந்த அந்நிய சக்திகளை சந்தேக படலாம்.
நீண்ட காலமாக பலரும் குழம்பி போயிருந்த விடயம் இது.
இந்த கொலைகள் பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள்  குறிப்பிடும் போது இது ஒரு 
ஆலால் தர்மர் கொலைகள் ஒரு ஆழ்ந்த சதி என்று கூறிஉள்ளார் 
மேலும் அவர் , ஆலால் தர்மர் கொலையுண்ட நேரம் சூழ்நிலை ஆகியன ஒரு ஆழ்ந்த சதி முயற்சியை குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் இலங்கை பிரச்னைக்கு தீர்வுக்கான நகல் யோசனைகளை பரிசீலிக்க   இலங்கை அமைச்சரவை கூடியபோது இவை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகையினாலே  இக்கொலைகளுக்கு பின்னணியில் ஒரு சதிமுயற்சி இருப்பதை ஊகிக்க முடிகிறது என்றார்,
1985 ஜூலையில் பூட்டனின் தலைநகரான திம்புவில் இலங்கை அரசுக்கும் ஈழத்தமிழ் தலைவர்களுக்கும் இடையே இந்திய அரசு தலைமையின் கீழ் சமாதான  பேச்சுவார்த்தை நடைபெற்றது 
அதில்   இலங்கை அரசு, தமிழ் விடுதலை இயக்கங்கள் (TELO, TULF, EROS, EPRLF, PLOTE, EELA - புலிகள் அமைப்பு ஆகியன பங்கேற்றது!
அதில் முக்கிய கோரிக்கையாக தமிழர் தரப்பால் 4 முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன1.அவையாவன: 
    தமிழர்களை ஒரு தேசமாக அங்கீகரித்தல்.
    தமிழர்களின் தாயகக் கொள்கையை அங்கீகரித்தல்.
    தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
    இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குதல்!
இவையே திம்பு அடிப்படைக் கோட்பாடுகள் (Thimphu Principles) எனப்படுகிறது.
இக்கோரிக்கைகள் இலங்கை அரசைவிட இந்திய அரசுக்கே மிகப்பெரும் தலையிடியாக இருந்தது!
இந்திய அதிகாரிகளின் வேண்டா  வெறுப்பு வெளிப்படையாக தெரிந்தது.
தமிழ் தலைவர்களை இவர்களை பார்த்து மிகவும் தரக்குறைவான  வார்த்தைகளை வீசினார்கள்  
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முடிவில் சந்திரஹாசன் சத்தியேந்திரா அன்டன் பாலசிங்கம் ஆகியோருக்கு நாடு கடத்தும் அறிவிப்பு வெளியானது  
இது பின்பு மறுதலிக்க பட்டது 
சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களை போராளி இயக்கங்கள் கூறுவதை இந்திய அரசு பெரிதாக எடுக்கவில்லை.
ஆனால் இந்த கோரிக்கை தமிழர் விடுதலை கூட்டணியின் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. 
இது இந்திய அரசை  கொஞ்சம் அசைத்து பார்த்து விட்டது 
ஒரு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஜனநாயக கோரிக்கையை  புறந்தள்ளுவது இந்திய அரசுக்கு இலகுவானதல்ல 
உலக நாடுகளின் ஆதரவு பெருமளவில் தமிழர் விடுதலை கூட்டணிக்கு இருந்தது 
எனவே தமிழர் விடுதலை கூட்டணியின் கைகளை முறுக்குவது என்பது இந்தியாவுக்கு இலகுவானதல்ல  
உலக நாடுகளின் விமர்சனத்தை இந்தியாவுக்கு  பெற்று தரும் அபாயம் இதில் இருந்தது 
தமிழர் விடுதலை கூட்டணியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் இருந்தார்கள் 
தமிழக அரசு அவர்களுக்கு தனி வீடுகள் கொடுத்திருந்தது 
இந்நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியின்  அட்வகேட் ஆலாலசுந்தரமும் எம்பியும் திரு தர்மலிங்கம்  எம்பியும் மட்டும்தான் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தார்கள்.
குறிப்பாக கூட்டணியின் நிர்வாக செயலாளரான திரு ஆலாலசுந்தரம் அவர்கள்தான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு  தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரியாளர்களை சந்தித்து களநிலவரங்களை  அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தார் 
தமிழர்களின் ஜனநாயக தலைமை இன்னும் தமிழ் மண்ணில்தான் இருக்கிறது என்ற செய்தியை இவர்களின் இருப்பு இலங்கை  இந்திய அரசுகளுக்கும் உலகிற்கும் தெரிவித்து கொண்டிருந்தது 
இப்படி ஒரு நிலையில்தான் இந்த இருவரும் படுகொலை செய்யப்பட்டார்கள்  
இவர்களின் யாழ்ப்பாண இருப்பும் அரசியல் செயல்பாடும் யாருக்கு வேண்டாததாக இருந்தது?
இதுதான் கேள்வி!
இவர்களின் கொலைகள் உள்ளூர் போராளி குழுக்களால்தான் நடத்தப்பட்டது என்பது ஒன்றும் இரகசியம் அல்ல.
இவர்களின் பின்னணியில் இருந்த சதிகார சக்தி எது?
மறைந்த திரு ஆலாலசுந்தரம் அவர்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்து ஒரு செய்தி கூறப்படுகிறது  அது  எவ்வளவு தூரம் நம்பகமானது என்பதை காலம்தான் கூறவேண்டும் 
அது. யாழ்ப்பாண தெருக்களில் தமிழ் ஆயுத தாரிகளின் அட்டகாசம் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது எனவே அவர்களுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டாம் என்று இந்திய அரசுக்கு திரு ஆலாலசுந்தரம் அவர்கள்  ஒரு கடிதம் எழுதியதாகவும்,
 அது ஒரு ஆயுத குழுவின் கைகளுக்கே வந்து சேர்ந்ததாகவும் அதன் காரணமாகாவே  கொலைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது 
ஒரு புலனாய்வு அதிகாரி நேரடியாகவே அந்த கடிதத்தை அவர்களிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது 
உண்மையில் திரு ஆலாலசுந்தரம் அவர்கள் அப்படி ஒரு கடிதத்தை எழுதவே இல்லை என்றும் கூறப்படுகிறது 
போலியாக ஒரு கடிதத்தை தயாரித்து அந்த ஆயுத குழுவிடம் அந்த அதிகாரி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது .
ஏனெனில் தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் செயல்பாடுகள்தான் அவர்களின் குறி என்று கூறப்படுகிறது 
இவற்றில் எது சரி எது தவறான தகவல் என்பது பற்றி எதிர்காலம் தெளிவு படுத்தும் 
எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது ஆலாலசுந்தரம் தர்மலிங்கம் ஆகியோரின் கொலைகள் வெறும் ஆயுததாரிகளின் பயங்கரவாதம் மட்டுமல்ல .. 
இலங்கை ஒற்றை ஆட்சி அரசமைப்புக்கு விசுவாசமாக இருக்க மறுத்து சத்திய பிரமாணம் செய்யாமையால்   எம்பி பதவி மட்டும் போகவில்லை 
இவர் வழக்கறிஞராக தொழில் பார்க்கும் வாய்ப்பும் இவரிடம் இருந்து பறிபோனது 
பல போராளிகள் இவரின் வீட்டு தொலைபேசியை பாவித்ததனால் அதன் செலவீனங்களை கூட இவரால் செலுத்துவதற்கு முடியவில்லை 
இது பற்றி இவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புக சட்டர்டேய் ரிவியூவில் இவரின் நிதி தட்டுப்பாடு பற்றி எழுயிருந்தது 
தொலைபேசி கட்டணங்களை கூட செலுத்த சிரமப்பட்டார் 
அதில் தனது மக்களுக்கு ஒரு சைக்கிள் வாங்குவதற்க் நகையை அடைவு வைக்கும் நிலைக்கு கூட தள்ளப்பட்டார்.
இவரின் வீட்டில் அடிக்கடி வந்து இயக்க தேவைக்காக தொலைபேசியை பாவித்தவர்களே இவரை  அந்நியர்களின்  ஏவல் பேய்களாக மாறி கொன்றார்கள் என்பது எவ்வளவு கொடுமை?
திரு  மு ஆலாலசுந்தரம் அவர்கள் தமிழ்நாட்டில் கல்வி பயிலும் போது திராவிட இயக்கங்களோடு நெருங்கிய நட்புடன்  இருந்தவர் 
உண்மையில் திராவிட சித்தாந்த கல்லூரியின் மாணவர்தான் திரு ஆலாலசுந்தரம் அவர்கள்.
அதனால்தானோ என்னவே திரு அமிர்தலிங்கம் திரு ராசதுரைக்கு அடுத்த இடத்தில அழகு தமிழில் பகுத்தறிவு கருத்துக்களை  அருவி போல் அள்ளிவீசும் பேச்சாற்றல் திரு ஆலாலசுந்தரத்திற்கு மட்டுமே இருந்தது.
நல்ல பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் இவருக்கு இயற்கையாகவே உண்டு 
இவர் ஒன்பது நாடகங்களை எழுதி நடித்தார்     
அவை பின்வருமாறு :
அண்ணா 
சங்கிலியன்
சாந்தி எங்கே?
தியாகச் சுடர்
பொறுத்தார் பொன்னம்பலம்
கலையின் பரிசு
சகோதர விரோதி
கடமை
நல்வாழ்வு
இவர் அரசியலுக்கு போகாமல் இருந்திருந்தால் தமிழ் இலக்கிய உலகம் ஒரு பெரும் ஆளுமையை இன்றுவரை பெற்றிருக்கும்

 May be an image of text

May be an image of text
  


No comments:

Post a Comment