Thursday, June 1, 2023

துரோகம் என்ற சொல்லை ஒரு அரசியல் கோட்பாடாகவே மாற்றிய SJV and EMV combo

துரோகம் என்ற சொல்லை ஒரு அரசியல் கோட்பாடாகவே மாற்றிய SJV  செல்வநாயகம் and   EMV நாகநாதன் சம்பந்திகள்!
பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் குடும்பத்தினர் ( விக்கி குடும்பம்) இலங்கை முழுவதையும் ஒரே நாடாகதான் கருதினார்கள்
அதற்கேற்பவே தங்கள் அரசியலையும் வாழ்வியலையும் முன்னெடுத்தார்கள்
இக்குடும்பத்தின் முக்கியமான சொத்துக்கள் தென் இலங்கை முழுவதும் விரவி இருக்கிறது .
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இக்குடும்பத்தினரின் ஆதிக்கம் இன்றுவரை இருக்கிறது
மலையக மக்களின் வாக்குகள் இலங்கையை ஒரு கம்யூனிஸ்டு நாடாக்கி விடும் என்ற நிலைமை இருந்தபோது
டி எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த திரு அருணாசலம் மகாதேவா அந்த கம்யூனிச வாக்கு வங்கியை இல்ல்லாமல் செய்வதில் பெரும்பங்கு ஆற்றினார்
பின்பு சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் திரு ஜி ஜி பொன்னம்பலத்தால் தோற்கடிக்கப்படடார் .
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக மிக மிக நெருங்கிய தொடர்புகள் இருந்த காலக்கட்டம் அது.
அப்போதெல்லாம் இலங்கையின் இந்திய தூதர் பதவி என்பது இலங்கையின் உதவி பிரதமர் பதவிக்கு ஒப்பானது.
அந்த பொறுப்பை திரு அருணாசலம் மகாதேவாவிடமே திரு டி எஸ் சேனநாயக்க ஒப்படைத்திருந்தார்
அடிப்படையில்  திரு . அருணாசலம் மகாதேவா அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவராகும்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மற்றும் மலையக மக்களின் நலன்களில் எந்த இலங்கை தமிழ் தலைவரையும் விட ,
எந்த சிங்கள தலைவரையும் விட நேர்மையாக  புத்திசாலியாக திரு அருணாசலம் மகாதேவா அவர்கள் நடந்து கொள்வார் என்று இந்திய இலங்கை அரசுகள் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தன.
பிரித்தானிய எதிர்ப்பை விட கம்யூனிச ஆபத்து என்ற பிரச்சனையை விட கம்யூனிச ஆபத்து என்ற விடயமே முழு தெற்கு ஆசியாவையும் அன்று அச்சுறுத்தி கொண்டிருந்தது.
இலங்கையின் கம்யூனிச வாக்குவங்கியை காலாவதியாக்கும் நடவடிக்கையை,
 இந்திய வம்சாவளி மக்களோ மலையக மக்களோ இந்திய அரசு மீது கோபம் கொள்ளாத விதத்தில் மிக தந்திரமாக திரு அருணாசலம் மகாதேவா திரு நடேசபிள்ளை போன்றவர்கள் செயல்பட்டனர். (ஐ தேக சுவாமிநாதனும் விக்கினேஸ்வரனும் இக்குடும்ப வாரிசுகள்தான்)
நிலைமை கைமீறி போனதை புரிந்து காந்த திரு ஜி ஜி பொன்னம்பலம் இலங்கை அரசோடு ஒற்றுமையாக செயல் பட்டு பொருளாதார விரிவாக்க அரசியலை முன்னெடுத்தார்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் மற்றும் (ஜான் ஜெபரத்தினம்) EMV நாகநாதன் போன்றார் தங்கள் துரோக அரசியல் கடையை திறந்தார்கள்
எந்த வித அரசியல் கோட்பாடும் திட்டங்களும் இன்றி வெறுமனே ஜி ஜி பொன்னம்பலத்திடம் இருந்து அரசியலை கைப்பற்றும் நோக்கோடு மட்டுமே இந்த இருவரின் அரசியல் அமைந்தது
இந்த இருவரும்தான் வெறும் துரோகம் என்ற சொல்லை ஒரு அரசியல் கோட்பாடாகவே  தரமுயர்த்தினார்கள்
இவர்களின் இந்த துரோகம் என்ற ஒற்றை சொல் இன்றுவரை தமிழர்களை சுயமாக சிந்திக்க விடாமல் தோற்கடித்து கொண்டிருக்கிறது.
மறுபுறத்தில் இந்த இருவரின் வாரிசுகள் இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு சுகமாக  நலமாக வசதியாக வாய்ப்புக்களோடு வாழ்கிறார்கள்.
இந்த இருவரின் பின்னால் சென்றவர்கள் ( திரு அமிர்தலிங்கம் திரு ராசதுரை , பிரபாகரன் உட்பட) வாழ்க்கையை தொலைத்தார்கள் .

No comments:

Post a Comment