Tuesday, September 6, 2022

இலங்கை சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.

 


ராதா மனோகர்
: இலங்கையில் உள்ள சிங்களவர்கள்  பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.
சைவ வைணவர்களின் கொடுமைக்கு அஞ்சி இலங்கைக்கு குடிபெயர்ந்த திராவிடர்கள் தங்கள் பௌத்த மதத்தை காப்பதற்காக சிங்கள மொழியை பயன்படுத்தினா
ர்கள்   காலப்போக்கில் அது அவர்களின் தாய் மொழியானது
இது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக இருந்தாலும் பலரும் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதில்லை
தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக தமிழ் அரசர்களும் அவர்களை போலவே கடும் போக்கை கொண்டிருந்த  தமிழ் தேசியர்களின் வரலாற்று பின்னணியில் இருந்து இதை நோக்கவேண்டும் என்று கருதுகிறேன். 
எப்போதும் பிற சமூகங்களை இழிவாக கருதும் ஒரு இனவாத போக்கு தமிழர்கள் மத்தியில் பரவியதும் ஒரு காரணமாக  இருக்கலாம்
:" நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எனது முன்னோர்கள் இந்தியாவில் இருந்த வந்த தமிழர்கள்தான் . நான் இப்போது சிங்களவன் . இதில் என்ன தவறு இருக்கிறது?"

இப்படி கூறியவர் ஒரு சாதாரண மனிதரல்ல . இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நீண்ட காலம் உச்சத்தில் கோலோச்சிய ஒரு பெரும் அரசியல் தலைவராகும்.
இலங்கையின் நீர்ப்பாசன திட்டங்களின் தந்தை என்று கூறக்கூடிய அளவு நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இன்னும் பல்வேறு பொறுப்புக்களை அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் தனது திறமையை நிரூபித்த தலைவர் கௌரவ சி பி டி சில்வா அவர்களே இந்த கூற்றை கூறியிருக்கிறார்
இலங்கை தமிழ் அரசியலில் மிகபெரும் ஆளுமையாக அறியப்பட்ட திரு வி நவரத்தினம் அவர்களிடம் தான் இந்த கூற்றை திரு சி பி டி சில்வா கூறியிருக்கிறார் .  வி நவரத்தினம் கூறுகையில்,  சி.பி. டி சில்வா - ஒருமுறை எங்களில் சில - தமிழ் எம்.பி.க்களிடம், 'என்னைப் பாருங்கள். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு என் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள். நான் இப்போது சிங்களவன். அதில் என்ன தவறு இருக்கிறது. ?'" தமிழ் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பக்கம் 130.
பிரபல வரலாற்று ஆசிரியர் ஜி சி மெண்டிஸ் என்பவர் தனது The Early History of Ceylon, என்ற நூலில்   இது பற்றி குறிப்பிடுகையில்
"கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் தென்னிந்திய திராவிடர்கள் சிங்கள இனத்தை உருவாக்க உதவினார்கள் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் உள்ளன ...
ஆனால் சிங்களவர்களிடையே தமிழ் இரத்தத்தின் அளவை அளவிடுவது கடினம், ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லை, அது கணிசமானது. ." - பக்கம் 9.
     According to V Navaratnam, "He - C P De Silva - once told some of us - the Tamil MPs, 'Look at me. Four-hundred years ago my forefathers were Tamils who came from India. I am now Singhalese. What is wrong with me?'" The Fall and Rise of Tamil Nation page 130.
atimes. com/ind-pak/Cl01Df05.html

No comments:

Post a Comment