ராதா மனோகர் யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை எஸ்ஜேவி செல்வநாயகமும் அவரின் தமிழரசு கட்சியும் ஏன் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள்?
தமிழர்களின் கல்வி சார்ந்த இவ்விடயத்தை வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்த வேணடும்,.
தமிழரசு கட்சியின் மேட்டுக்குடி பாசிசம் அம்பலமாகுவதை தெளிவாக காணலாம்!
ஆரம்பம் முதலே யாழ்ப்பாண பல்கலை கழகம் அமைவதை இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை இப்போது நம்புவது மிகவும் சிரமமாக இருக்கும்.
அந்த அளவு இவர்கள் மோசமானவர்களா என கருத தோன்றும் ,
இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்!
இலங்கை தமிழ் தேசியர்கள் அடிப்படையில் சித்தாந்த ரீதியில் வெறுமையானவர்கள் என்பதை முதலில் ஞாபகத்தில் இருத்தி கொள்ளவேண்டும்.
இவர்களின் வெறுப்பு அரசியல் சித்தாந்தத்திற்கு மக்கள் கல்வி அறிவு பெறுவது என்பது உகந்தது அல்ல என்பதுவும் ஒரு முக்கிய காரணமாகும்..