Tuesday, November 19, 2024

செல்வநாயகம் அமைதியானார் சேருவிலை தொகுதி உருவானது!


Parliament of Sri Lanka - Sellathambu, Xavier Mark
X,M,Sellathambu
ராதா மனோர் : 1970 க்கும் 1977 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் கிழக்கு மாகாணத்தில் சேருவிலை தொகுதி உருவாக்கப்பட்டது
இத்தொகுதியனது வடக்கு மாகாணத்திற்கு கிழக்கு மாகாணத்திற்கு இடையில் சிங்கள வாக்காளர்களை பெரும்பான்மையராக கொண்ட ஒரு தொகுதியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் ஒரு முயற்சியாக இது அப்போது கருதப்பட்டது.
ஆனால் இதற்கு எஸ் ஜே வி  செல்வநாயகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை
ஏன் தெரியுமா?
T. Sivasithamparam - Wikipedia
T.Sivasithambaram
அந்த காலக்கட்டங்களில்தான் தமிழரசு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழர் விடுதலை கூட்டணியாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.
அப்போது வவுனியா எம்பியாக தமிழரசு கட்சியை சேர்ந்த எக்ஸ் எம் செல்லத்தம்பு இருந்தார்
அதுவரை வவுனியா எம்பியாக இருந்த டி சிவசிதம்பரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.1977 தேர்தலில் வவுனியா எம்பி எக்ஸ் எம் செல்லத்தம்புவிற்குதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
மறுபுறத்தில் எல்லைக்காவலர் என்று புகழ் பெற்ற வவுனியா சிவசிதம்பரத்திற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
முன்னாள் எம்பி திரு டி சிவசிதம்பரம் ஏற்கனவே அடங்கா தமிழன் சுந்தரத்திலிங்கத்தை தோற்கடித்து எம்பியானவர், மூன்று தடவை எம்பியாக வெற்றி பெற்றவர்

1946 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 60000 அறுபதினாயிரம் இந்தியர்கள் இலங்கையில் குடியேறி உள்ளார்கள்


ராதா மனோகர்

  : 1946 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 60000 அறுபதினாயிரம் இந்தியர்கள் இலங்கையில் குடியேறி உள்ளார்கள்
ஒரு வருடத்தில் இலங்கையில் உள்ள இந்திய மக்கள் தொகை சுமார் 60000 ஆக  அதிகரித்துள்ளது!
இலங்கை அரசு பதிவாளர் ஜெனரல் திரு டேவிட்சன் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரத்தின் ஆரம்ப அறிக்கையின்படி,
டிசம்பர் 31 ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு மக்கள் தொகை 6606000 ஆக இருந்தது.
டிசம்பர் 31-1946 இல் அந்த மக்கள்தொகையின் மொத்த மதிப்பீடு (இராணுவம்  மற்றும் கப்பல் ஊழியர்கள்  தொகையைத் தவிர்த்து) 6784000 ஆக இருந்தது

Thursday, November 7, 2024

துரையப்பாவை துரோகி என்று தானே இவர்களின் அரசியல் வசூல் வேட்டை

 ராதா மனோகர் : இலங்கையில் தமிழ்மொழியை தமிழர்களின் வரலாற்றை காப்பதாக உரத்து முழங்குவோர்கள் திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பாவின் பெயரை கேட்டாலே நடுங்குகிறார்கள்
இந்த தமிழ் தேசியர்களின் ஆவணகாப்பகங்களில் மட்டுமல்ல இணையத்தளங்களில் கூட திரு அல்பிரட் துரையப்பாவின் பெயரை வலிந்து காணாமல் போக செய்துள்ளார்கள்!
இலங்கை தமிழ் ஆளுமைகள் என்ற வரிசையில் வெறும் கிராமசபை அங்கத்தவர்கள் மற்றும் சோப்பு சீப்பு கண்ணாடி விற்பவர்கள் பெயர்கள் மற்றும் சுருக்கமான வரலாறுகள்கூட இடம் பெற்றுள்ளது
ஆனால் இன்றைய யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்காற்றிய திரு அல்பிரட் துரையப்பாவின் பெயர் மட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்படுகிறது.
ஏன் தெரியுமா இந்த இருட்டடிப்பு?
இவர்களின் தமிழ் தேசியம் என்று குறிப்பிடப்படும் முதலில்லா வியாபாரத்தின் தாங்கு தூணே துரோகி என்ற சொல்தானே!
துரையப்பாவை துரோகி என்று கட்டமைத்துத்தானே இவர்களின் அரசியல் வசூல் வேட்டை நடக்கிறது!
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!