ராதா மனோகர் : இலங்கை இந்திய வம்சாவளி மக்களை பார்த்து நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் கேட்டபொழுது
நாங்கள் இலங்கையில் இடதுசாரி சோஷலிச அரசை நிறுவுவோம் அங்கு சிங்களவர் தமிழர் பிரச்சனையே இருக்காது
எனவே இதைக்காட்டி நீங்கள் (பிரிட்டிஷ்) இங்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்கள் இடதுசாரிகள்.
அதுமட்டுமல்ல மலையக மக்களின் வாக்குவங்கி மூலம் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ்காரன் தரவந்த பாதுகாப்பு விடயங்களை உதாசீனம் செய்து . நீ போ நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என்றார்கள் இந்த இடதுசாரிகள்
சிங்கள மக்கள் மத்தியில் பெறமுடியாத செல்வாக்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளால் ஈடு கட்ட முடியும் என்று நம்பி ஒரே கல்லில் பிரிட்டிசாரையும் பகைத்து சிங்கள மக்களையும் பகைத்து தங்களை நம்பிய இந்திய வம்சாவளி (மலையகம்) மக்களின் வாழ்வை சூறையாடிய வரலாற்று குற்றவாளிகள் இந்த இடது சாரிகள்.
சிங்கள மக்கள் ஒருபோதும் இடதுசாரிகள் பக்கம் பெரிதாக செய்யவில்லை அவர்கள் பௌத்த சாசனத்தையே பின்பற்றுபவர்கள்
இந்திய வம்சாவளி மக்கள் இந்த இடது சாரிகள் பின்னால் போனதன் விளைவு இவர்களை கம்யூனிஸ்டுகள் என்று கருதி பயந்தார்கள் சிங்கள மக்கள்
இதனால்தான் முதல் அடியிலேயே வாக்குரிமை குடியுரிமைகளை அவர்கள் பறித்தார்கள்.
இன்று வரை இந்த பெரிய மோசடியை எல்லோரும் சேர்ந்து திறமையாக மறைத்து விட்டார்கள்
ஆனால் இந்த இடதுசாரிகள் பிற்காலத்தில் பயங்கர இனவாதிகளாக மாறியதுதான் வரலாறு
Radha Manohar
திராவிட கருத்துக்கள்தான் இலங்கை வடபகுதியில் முதல் முதலாக உருவான அரசியல் பொதுவெளியாகும்.
அதுவரை அங்கு சைவமும் கிறிஸ்தவமும் ஒரு அரசியல் சித்தாந்தம் போலவே சமூகவெளியில் காட்சி அளித்தது.
இலங்கையின் முதல் திராவிட இயக்கம் தோன்றியது ( திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் -திராவிடன் இதழ் 1927) யாழ்ப்பாணத்தில்தான்!
அதுவரை சுயமரியாதை . ஜாதிகளற்ற சமூகம் பற்றி எல்லாம் அறிந்திராத ஜாதிப்பற்றாளர்கள் திராவிட கருத்தியலை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது மிகப்பெரும் வரலாறு.
ஒரு புறத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பள்ளிக்கூடங்களை படிப்பகங்களை கொழுத்துதல்
மறுபுறத்தில் ஜாதி என்பதே பொருளாதார வர்க்க ஏற்ற தாழ்வுகளால் உருவாவதுதான் என்ற போலி இடதுசாரி பிரசாரம் என்று தங்கள் நாசகார அரசியலை முன்னெடுத்தார்கள்.
இதில் ஜாதிப்பற்றாளர்கள் வெற்றி பெற்றார்கள்
திராவிட இயக்கம் இருந்த இடமும் தெரியாமல் வலிந்து காணாமல் போனது!
மறுபுறத்தில் புதிய ஏழைப்பங்காளர்களாக பல மேட்டுக்குடி கம்யூனிஸ்டு தலைவர்கள் உருவானார்கள்.
காலப்போக்கில் பல இடதுசாரிகள் அசல் இனவாதிகளோடு வெறுப்பு அரசியல் ஜோதியில் கலந்தார்கள்
No comments:
Post a Comment