![]() |
ராதா மனோகர் சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது