ராதா மனோகர் எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 1952–1957.
வட சென்னை மக்களவை உறுப்பினர் 1957–1962
இவரின் முழுப்பெயர் செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை (Sebastian Cyril Constantine Anthony Pillai, ஏப்ரல் 27, 1914 – ஆகஸ்ட் 16, 2000)
இலங்கை இடது சாரித்தலைவராகவும் பின்பு இந்திய இடதுசாரி தலைவராகவும் இருந்த ஒரு சுவாரசியமான அரசியல் வரலாறை கொண்டிருப்பவர்
யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் சென்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் கற்றார்.பின்பு இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் படித்தார்.
இவரை பற்றி ஒரு முக்கிய கோணத்தில் ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது .
மறைந்த இலங்கை ஜனாதிபதி திரு ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் இவரை பற்றியும் அந்த காலத்து இலங்கை இடது சாரிகள் பற்றியும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு இந்த இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
அந்த விடயத்தை நோக்குவதற்கு ஒரு முன்னோடியாக திரு எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையின் வரலாறு ஒரு உசா துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்
இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி 1948 இல் இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்து .[
1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.
1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.
இக்கட்சியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக 1957 இல் வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்