![]() |
ராதா மனோகர் 1942 இல் கேரளாவில் திரு பாலகிருஷ்ண மேனன் என்ற இளைஞர் காங்கிரசின் குயிட் இந்தியா Quit India இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டார் .
அந்த இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்
இவரை கைது செய்யும் நோக்கோடு போலீஸ் தேடிய பொழுது தப்பி ஓடி அன்றய இந்தியாவின் வடமேற்கு எல்லையில் உள்ள அபோத்தாபாத் (இன்றைய பாகிஸ்தான்) Abbottabad என்ற சிற்றூரில் ஒழிந்திருந்தார்.
பிற்காலத்தில் இந்த ஊரில் வைத்துதான் ஒசாமா பின் லாடனை அமெரிக்கா போட்டு தள்ளியது.
இந்த கிராமத்தில் இரண்டு வருடங்கள் ஒழித்திருந்த பின்பு போலீஸார் தன்னை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட வேறு சில இளைஞர்களோடு பஞ்சாபுக்கு வந்தார்.
ஆனால் அங்கு இவரும் இவரது நண்பர்களும் போலீசிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

