Saturday, January 10, 2026

பாலகிருஷ்ணா மேனன் என்கின்ற RSS சுவாமி சின்மயானந்தா! அரசு காணியை ஆட்டைய போட்டு Ramboda ஆஞ்சநேயர் கோயில்

May be an image of text that says "BALAKRISHNA MENON [CHINMAYANANDA) 8 MAY 1916 COCHIN KERALAM 3 AUGUST 1993 CALIFORNIA AMERICA imgflip. com"

ராதா மனோகர்  1942 இல் கேரளாவில் திரு பாலகிருஷ்ண மேனன் என்ற இளைஞர் காங்கிரசின் குயிட் இந்தியா Quit India  இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டார் . 
அந்த இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார் 
இவரை கைது செய்யும் நோக்கோடு போலீஸ் தேடிய பொழுது தப்பி ஓடி அன்றய இந்தியாவின் வடமேற்கு எல்லையில் உள்ள அபோத்தாபாத் (இன்றைய  பாகிஸ்தான்)  Abbottabad  என்ற சிற்றூரில் ஒழிந்திருந்தார்.
பிற்காலத்தில் இந்த ஊரில் வைத்துதான் ஒசாமா பின் லாடனை அமெரிக்கா போட்டு தள்ளியது.
இந்த கிராமத்தில் இரண்டு வருடங்கள் ஒழித்திருந்த பின்பு போலீஸார் தன்னை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட வேறு சில இளைஞர்களோடு பஞ்சாபுக்கு வந்தார்.
ஆனால் அங்கு இவரும் இவரது நண்பர்களும் போலீசிடம்  பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Friday, January 2, 2026

சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு

May be a doodle of text that says "சிங்கள மக்களின் மரபணு வரலாறு GENE GENETICHISTORYOFTHESINHIALESE GENETICHISTORYOF TIC HISTORY OF SINHALESE का Z ጣ த ர ma 斗 ಇ यी 99 தாம் கி எ"
 Rajasekar Pandurangan :  சிங்களரும் தமிழரும் ஒன்றே
இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு: புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன?
இலங்கைத் தீவானது பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் சங்கமமாகத்  திகழ்ந்து வருகிறது.
 இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு, 
வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 
இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிங்கள மக்கள் ஆவர். இவர்களின் தோற்றம், வரலாறு மற்றும் இவர்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்களவர்களின் தோற்றத்தை வட இந்தியாவுடன் இணைக்கின்றன. அதேவேளையில், புவியியல் ரீதியாக அவர்கள் தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது? 
அல்லது இரண்டுமே உண்மையானதா?  

 என்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியாக ஒரு புதிய மற்றும் விரிவான மரபணு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.