Thursday, December 11, 2025

இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு - இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen -

May be an image of dais, hospital, the Oval Office and text

 ராதா மனோகர் : இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான்  நிர்மலா சீதாராமனிடம் நேரில் கோரிக்கை!
இந்த கார்ட் ஏற்கனவே இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வழங்கப்படுகிறது!
இந்த கார்ட் மூலம் இந்தியாவுக்கு விசா இல்லாமல் எத்தனை தடவையும்  சென்று வரமுடியும்.
 நிரந்தரமாக தங்க முடியும் 
நிரந்தரமாக தொழில் செய்ய முடியும் 
வியாபாரம் செய்ய முடியும் .
கல்வி கற்க முடியும்! 
சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்!
தேர்தல்களில் வாக்கு போட முடியாது!
 விவசாய நிலங்களை வாங்க முடியாது!
An Overseas Citizen of India (OCI) is a foreign national of Indian origin (excluding Pakistan/Bangladesh) who gets a special lifelong visa and permanent residency status in India, offering benefits like indefinite stay, work/study rights, and financial parity with NRIs, but not political rights (voting/holding office) or agricultural land ownership, essentially a permanent visa/residency for people with Indian roots.

மலையக மக்களின் வாழ்வோடு விளையாடும் சுயநிர்ணய உரிமை கூவல்!

 ராதா மனோகர் : இலங்கை மலையக மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சிலர் கூவ தொடக்கி உள்ளார்கள்!
இதன் மூலம் இவர்கள் என்னதான் கூறவருகிறார்கள்?
எஸ்ஜேவி செல்வநாயகத்தின் வெறுப்பு அரசியலின் மற்றுமொரு பக்கவிளைவுதான் இது!
இலங்கையின் 80 வீத பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களின் வெறுப்பை அறுவடை செய்து வயிறு வளர்க்கும் கும்பலின் கடைந்தெடுத்த கயமை அரசியல் இது!
மலையக சுயநிர்ணய உரிமை என்ற முணு முணுப்புக்கள் அண்மை காலங்களாக கொஞ்சம் உரத்த முழக்கமாக உருமாறுவது தெரிகிறது
துரோகிஸ்தானியர்களின் பணம் இதன் பின்னணியில் இருக்கிறது என்ற சந்தேகம் உள்ளது!
இலங்கை இன மோதல்களில் ஏழைகளை பலிகொடுத்து திருடர்கள் கோடீஸ்வரர்கள் ஆனதைத்தான் கண்கூடாக பாரிக்கிறோமே!
அந்த பாசிச கூட்டத்திற்கு ஒரு கேள்வி!
மலையக சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?
மலையக மக்கள் மலையகத்தில் தனிநாடு கேட்கிறார்களா?
அல்லது வேறு எதாவது நாடு ஒன்றோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்கிறார்களா?