Saturday, October 18, 2025

இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை கருவிலேயே கொன்ற திரு அண்ணாமலை வரதராஜ பெருமாள்

No photo description available.
ராதா மனோகர் : இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க பெற்ற நன்மைகள் அனைத்தையும்  புலிகளுக்கு முன்பே ஒருவர் தோற்கடித்தார் என்பது தெரியுமா?
புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் திரு.வரதராஜ பெருமாள்  ஆகும்.


வடகிழக்கு மாகாண சபையை ஒரு தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில் கடுமையாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள் 
ஜேவியும் பல இனவாத குழுக்களும் தென்னிலங்கையில் மிக பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்! 
காலி மாத்தறை ஆகிய மாவட்டங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று கருதும் அளவுக்கு   நிலைமை மோசமாகி விட்டிருந்தது.