Thursday, December 19, 2024

வடகிழக்கு மாகாண சபையை முடக்கியத்தில் பிரபாவுக்கே முன்னோடி வரதராஜ பெருமாள்

May be an image of 1 person
Dayan Jayathilak
May be an image of 1 person
Varatha Raja Perumal

ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் போராட்ட வரலாற்றில் திரு டயான் ஜெயதிலகா என்ற ஒரு மனிதரின் வகிபாகம் பற்றி பொதுவெளியில் ஒருபோதும் பேசப்பட்டதில்லை என்றெண்ணுகிறேன்
இவர் காலம்சென்ற பிரபல பத்திரிக்கை ஆசிரியர் திரு மேர்வின் டி சில்வாவின் மகனாவார்.
இளமை காலத்தில் இ பி ஆர் எல் எப் ஈரோஸ் போன்ற இயக்கங்களோடும் சில சிங்கள இடதுசாரி இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
வழமை போல இவர் சார்ந்த சிங்கள இடதுசாரி அமைப்புக்கள் பிற்காலத்தில் இந்திய எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு போன்ற பாரம்பரிய பரிணாம வளர்ச்சியை எட்டி இருந்தன.
இவரும் இந்த பாரம்பரியத்திற்கு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அதே பரிணாம வளர்ச்சியை பெற்றிருந்தார்.

May be an image of 1 person
Umakanthan
May be an image of 1 person
Daniel Ortega


கொழும்பு செயின்ட் ஜோசெப் காலேஜ் . அக்குக்வினாஸ் கல்வி நிறுவனம், மற்றும்   பேராதனை பல்கலை கழகம் என்று இவரது கல்வி தொடர்ந்தது.
மறைந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோசே டயனின் மீது இவரது இடதுசாரி தந்தைக்கு ஏற்பட்ட அதீத அபிமானம் காரணமாகவே இவருக்கு டயான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது ஒரு வகை நகைமுரண்தான்.
இவரின் ரகசிய இயக்க ஈடுபாடுகள் காரணமாக இவர் ் இலங்கை அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவில் இ பி ஆர் எல் எபின் ஆதரவில் தங்கி இருந்தார்