ராதா மனோகர் : உலக புகழ் பெற்ற மனித உரிமை பிரபலமும் எழுத்துலக பிரபலமுமான அருந்ததி ராய் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.
மீண்டும் மீண்டும் அவரை விமர்சிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
ஆனாலும் அவ்வளவு இலகுவாக இந்த குற்றவாளியை தப்ப விட முடியாது என்ற எண்ணமே எனக்குள் மேலோங்குகிறது.
இந்திய இடதுசாரிகள் முற்போக்குகள் பெரிதும் பார்பனிய கோட்பாட்டு பாதுகாவலர்கள்தான்!
இந்த கும்பலுக்கு ஒரு சரியான உதாரணமாக அருந்ததி ராய்தான் எனக்கு தெரிகிறார்.
நுனி நாக்கு ஆங்கிலம், அசல் ஆரிய வெள்ளை நிறம் , இலகுவாக மனதில் நிற்க கூடிய முகம் . சினிமாவுக்கு உரிய முகவெட்டு, மிக சிறந்த கதை சொல்லும் திறமை . போதிய அளவு எழுத்தாற்றல் நல்ல வாசிப்பு, புகழ் பெறக்கூடிய பிரச்சனைகளை கண்டறியும் ஆற்றல் போன்றவை இவர் மீடியாக்களுக்கு எப்போதும் அசல் தீனி போடும் ஆளுமையாக தெரிகிறார்.
இதை விட மிக முக்கியமான விடயம் ஊடகங்களுடனான இவரின் குடும்ப தொடர்புகள் மிக மிக அதிகம்!
இவ்வளவு திறமையும் ஆற்றலும் உள்ள இவர் மீது ஏனிந்த விமர்சனம் என்று பலரும் கருத கூடும்.