![]() |
ராதா மனோகர் உருத்திரபுரம் காசிலிங்க சரமா அய்யர் கொலை வழக்கு! 1963 இல் நடந்த இவ்வழக்கு கோகிலாம்பாள் கொலை வழக்கு என்று அறியப்பட்டது!
இந்த வழக்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது!
இந்த வழக்கு அந்த காலத்தில் மக்களின் அன்றாட பேசுபொருளாக இருந்தது..
அன்றைய ஈழநாடு நாளிதழ் தினசரி காலை மாலை என இரு பதிப்புக்களை வெளியிட்டது.
ஒரு கோயில் குருக்களையே அவரது மனைவி தீர்த்து கட்டியது அதுவரை கேள்விப்படாத ஒரு விடயமாக இருந்தது.
கொலையுண்ட திரு காசிலிங்க அய்யரும் சரி அவரது மனைவி கோகிலாம்பாளும் சரி தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி பெயர்ந்தவர்கள்தான்
இவர்களது ஒரு மகன் தற்போது கனடாவில் மிகப்பிரபலமான ஒரு கோயிலில் பெரிய குருக்களாக கோலோச்சி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இது பற்றி அவ்வப்போது பொதுவெளிக்கு வந்த செய்திகளின் தொகுப்பு இது!
சட்டத்தரணி கே.ஜீ. ஜோன்
இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி – உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும். வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள குக்கிராமமே உருத்திரபுரமாகும். இங்கு அபிவிருத்திக்காக குடியேறியவர்களே அதிகம். யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் மக்களுக்கும் இங்கு குடியேறியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது.