ராதா மனோகர் : யாழ்ப்பாண மக்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு invisible Segregation வெறுப்பு முள் வேலிக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள்!
யாழ்ப்பாணத்தில் உண்மையான சமூகவியல் ஆய்வாளர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்று உருப்பெருக்கி கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டி உள்ளது!
இந்த கேள்வியை வெறும் கேலியாகவோ அல்லது கோபமாகவோ நான் எழுப்பவில்லை.
நம் சமூகத்தின் பொதுப்புத்தி பற்றிய எனது பார்வையை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.
எனது பார்வை சரியா தவறா என்பதை காலம்தான் கூறவேண்டும்
கடந்த நூற்றாண்டுகளாக மெதுவாக ஆனால் ஆழமாக திட்டமிட்டு அடிப்படை மனித விழுமியங்களுக்கு எதிரான கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தில் புகுத்த பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்
ஜாதிய கட்டுமானத்தை தக்க வைப்பதற்காகவே மனித விழுமியங்களுக்கு பொருந்தாத பல கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மக்கள் நம்மை விட தரம் குறைந்தவர்கள், படிக்காதவர்கள், கொடூரமானவர்கள் என்பது போன்ற ஒரு மோசமான பொதுபுத்தி யாழ்ப்பாணத்தில் எப்படி உருவானது?
சிங்கள மக்கள் ஒரு போதும் நமக்கு இணையானவர்கள் அல்ல என்பது போன்ற கருத்துக்கள் அந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒலித்தது!
தற்போது அது குறைந்துள்ளது .. ஆனால் யாழ்ப்பாண கூட்டு உளவியலில் அந்த பொதுப்புத்தி இன்னும் கொஞ்சமாவது ஒட்டியிருக்கும் என்ற சந்தேகம் எனக்குள்ளது.
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Sunday, April 21, 2024
யாழ்தேச வெறுப்பு அரசியலும் - ஜாதி அரசியலும்
Sunday, April 7, 2024
சினிமாஸ் குணரத்தினம் ஏன் சுட்டு கொல்லப்பட்டார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? யார் குற்றவாளிகள்?
![]() |
ராதா மனோகர் : இலங்கை
திரையுலகின் பிதா மகன் என்றழைக்கப்பட்ட திரு கனகசபை குணரத்தினம் 20 July
1917 – 27 August 1989) அவர்களின் வரலாறு இலங்கை மக்களால் ஏன் போதியளவு
நினைவு கூறப்படுவதில்லை?
இவர் கொழும்பில் வைத்து ஒரு ஆயுத குழுவால் (ஜேவிபி) சுட்டு கொல்லப்பட்டதாக அந்த காலக்கட்டங்களில் எல்லா ஊடகங்களும் கூறின!
கே குணரத்தினம் இலங்கை திரைப்பட உலகின் ஆதார தூணாக விளங்கியவர் . இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல.!
32 சிங்கள திரைப்படங்களை தயாரித்து இயக்கி உள்ளார்
அதில்
25 படங்கள் வெற்றி படங்கள், ( Box office hit) . இலங்கையில் வேறு எந்த
இயக்குனரும் தயாரிப்பாளரும் இந்த சாதனைக்கு அருகில் கூட வரமுடியாது.
இலங்கை முழுவதும் பல திரையரங்குகளை சொந்தமாக வைத்திருந்தார்.
![]() |
இலங்கை திரைப்படங்களை வியாபார ரீதியில் வெற்றிகரமாக்க இவரது திரையரங்குகள் பெரும் வாய்ப்பாக அமைந்தது
அது
மட்டுமல்லாமல் ஹெந்தல வத்தலையில் இவர் அமைத்த விஜயா ஸ்டியோ நவீன
வசதிகளுடன் கூடியது. அங்கு ஹாலிவூட் படங்களின் படப்பிடிப்புகளும் நடந்தன.
கச்சத்தீவு ஸ்ரீமாவோ - இந்திரா காந்தி - Smiling Buddha -- அணு குண்டு!
![]() |
ராதா மனோகர் : கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும் முக்கியமான தொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது
குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!
இந்துமாக்கடல்
பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற
கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி
வந்துள்ளது.
May 1954 இல் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது
அந்த
மாநாட்டில் இலங்கை பிரதமர் சேர் ஜான் கொத்தலாவலை *Sri Lanka’s Prime
Minister Sir John Kotelawala) அவர்கள் இது பற்றி கூறுகையில்:
உலகில்
பெரும் நாசத்தை விளைவிக்க கூடிய அணு ஆயுத போட்டி பற்றி ஊடகங்களை
இருட்டடிப்புக்களையும் தாண்டி சில கவலைக்குரிய செய்திகளை அறிகிறோம்.
உலக
மக்களின் கரிசனையை மனதில் கொண்டு அமெரிக்கா ரஷியா பிரித்தானிய போன்ற
நாடுகள் இது பற்றிய செய்திகளை வெளிப்படையாக கூறவேண்டும் என்று
வலியுறுத்தினார்
1958 ஆம் ஆண்டு ஐநாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட
அமைச்சர் டி பி சுபாசிங்கா இது பற்றி ஐநாவில் பேசும்பொழுது : “For all
countries, whether large or small, has a right to protest against
policies which endangered their very existence”
![]() |
சிறிய நாடுகளாக இருந்தாலும் பெரிய நாடுகளாக இருந்தாலும் தங்களின் இருப்புக்கு சவாலாக இருக்க கூடிய திட்டங்களை எதிர்க்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டார்.