Tuesday, October 25, 2022

இலங்கை வீரகேசரியும் ஹரிஜன் என்ற காந்தியின் பார்ப்பனீய லேபிளும்

ராதா மனோகர் : ஆளுநர் ஆர் என் ரவி , பட்டியல் இனமக்களை குறிக்கையில் ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். இக்குற்றத்திற்கு   வன்கொடுமை தடை சட்டத்தில் தண்டிக்க வழி உண்டா என்று தெரியவில்லை  
மேலும் மோகன் கரம்சந்த்  காந்தியின் ஹரிஜன் என்ற லேபிள் மாற்றம் தொடர்பான ஒரு இலங்கை வரலாற்று செய்தி முன்பு பதிவிட்டிருந்தேன்   அந்த செய்தியும் முக்கியமானதுதான் :
இதோ அதன் மீள்பதிவு :    இலங்கையில் ஹரிஜன் என்ற சொல் எந்த காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை.
இந்த சொல்லே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை .
இந்நிலையில்  தமிழக பார்ப்பனர்கள் எப்படி ஒவ்வொரு பார்ப்பனீய கருத்துக்களாக அங்கு விதைத்தார்கள் என்பதை இந்த 1956 ஆம் ஆண்டு இலங்கை வீரகேசரி பத்திரிகை காட்டுகிறது.
இலங்கை அரசியல் அமைப்பிலோ சட்டத்திலோ ஜாதி இல்லை . நடைமுறையில் ஜாதி பாகுபாடு மட்டுமல்ல குற்றங்களும் இருந்தன தற்போதும் ஓரளவு இருக்கின்றன..

Thursday, October 20, 2022

சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்ட மொழியல்ல! . ரகசியங்களை பரிமாற பார்ப்பனர்கள் உருவாக்கிய செயற்கை மொழி - கோடிங் லாங்குவேஜ்

ராதா மனோகர்  : சமஸ்கிருதம் ஒருபோதும் சாதாரண சமூகங்களால் பேசப்பட்ட மொழியல்ல!
அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இயற்றப்பட்ட ஒரு சங்கேத மொழியாகும்.  
ஏராளமான செக்ஸ் ரகசிய குறிப்புக்களும் கதைகளும் அவற்றில் தாராளமாக உண்டு.
அவை பெண்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு சமஸ்கிருதம் மறைக்கப்பட்டது.
சாதாரண மக்களுக்கு தங்களின் சுரண்டல் ரகசியங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அம்மொழியை ஏனைய ஜாதியினருக்கு ஒரு மறை பொருளாக வைத்திருந்தனர்
ஒருவேளை தப்பி தவறி ஏனைய மக்கள்  சமஸ்கிருதத்தை அறிந்துவிட்டால் அவர்களின் காதில் ஈயத்தை ஊற்ற விதி எழுதிவைத்தார்கள்.
ஒரு ஆதிக்க சமூகம், அல்லது ஒரு அரசியல் சக்தி,
இன்னும் சரியாக சொல்லப்போனால் சாதாரண மக்களை ஆண்டுகொண்டிருந்த ஒரு கும்பல்,
தங்களின் ரகசிய தொடர்பாடலுக்காக உருவாக்கி கொண்ட கோடிங் மொழிதான் சமஸ்கிருதம்

இக்கருத்து  பலராலும் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டதுதான்.
ஆனால் மிக திட்டமிட்டு பொதுவெளிக்கு மறைக்கப்பட்ட கருத்தாகும்
பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கே இதை ஒரு மறை பொருளாக வைத்திருந்தார்கள் என்றால் இதன் இரகசியத்தின் முக்கியத்துவம் விளங்கும்

Thursday, October 13, 2022

காஞ்சி சங்கர மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது .. நிறுவனர் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதிதான். கட்டுக்கதைகள் அம்பலம்

ராதா மனோகர் :   காஞ்சி மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது!


காஞ்சி சந்திரசேகரேந்திரர்தான் நிறுவனர்!    இவரின் உண்மை பெயர் சுவாமிநாதன் சர்மா என்பதாகும் (20 May 1894 – 8 January 1994)!
இதுதான் காஞ்சி மடத்தின் உண்மையான வரலாறு !.
மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் காலத்தில்தான் உருவானது
கும்பகோணத்தில் இருந்த மடம்  கிபி 1839 இல் தான்  காஞ்சிபுரத்திற்கு மாறியது..
( sadananda@anvil.nrl.navy.mil (கே. சதானந்தா) என்பவரின் கட்டுரையில்  , editor. cs m.uc.e du (டைஜெஸ்ட் எடிட்டர்) ;

காஞ்சிபுரம், ஜூலை 24 (பிடிஐ) 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ( ? ) காஞ்சி மடத்தின் தலைவரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் 60வது நூற்றாண்டு விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் இன்று தொடங்கி வைத்தார்.என்று அறிவித்தார்கள்!
மேலும் சங்கரமடமானது கிமு 482 முதல் 477 வரை முதல் 'பீடபதி' (மடத்தின் தலைவர்) ஆதி சங்கரரால் இங்கு நிறுவப்பட்ட மடத்தின் 69 வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆவார்.என்றும் கூறப்பட்டது.

ஐயா, எல்லா மடங்களின் கணக்குகளின்படியும் ஆதி சங்கரர் காலம் கி.பி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரைதான் என்பது எல்லோரும் அறிந்ததே! .     இந்த கட்டுரை ஒரு ஆங்கில ஆய்வு கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது . அந்த ஆதார கட்டுரை வாசிப்பதற்கு இந்த தொடர்பை அழுத்தவும் ஆங்கில ஆய்வு கட்டுரை
மேலும் அவர்  நிறுவிய நான்கு மடங்களில் காஞ்சி மடம் இடம் பெறவில்லை .

Sunday, October 9, 2022

திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் .. 1927 சுன்னாகம் யாழ்ப்பாணம்

 ராதா மனோகர்  : இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம்  திராவிட அரசியலே! - 1927
இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
 சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது  
அதன் தலைவராக இருந்த இந்தப்போர்ட் ராஜரத்தினம்   c4 July 1884 – 12 March 1970)
Subramaniam  Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election.  As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
முழுக்க முழுக்க சைவ வாழ்வியலே ஒரு அரசியல் தத்துவமாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்

சுயமரியாதை - திராவிடன் பத்திரிகையின் தலையங்கம் 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம்

 ராதா மனோகர்  : 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து திராவிடன் என்ற பத்திரிகை நான்கு ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.. வெளியிட்டவர் சுன்னாகம் திராவிட வித்தியா சாலையின் நிறுவனரும் யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்க தலைவருமான வழக்கறிஞர் திரு சு ராசரத்தினம்  அவர்கள்.
திராவிடன் பத்திரிகையில் சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரையின் ஒரு பகுதிதான் இப்பதிவு.
இதில் உள்ள விடயங்களை  எல்லாம் அந்த கால சூழ்நிலை அந்த காலத்து தமிழ் நடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில்தான் நோக்க வேண்டும்.
சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரை எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒரு விடயம்   இப்பத்திரிகையின் ஆசிரிய தலையங்கமாகவே இது வெளிவந்திருக்கிறது   
இலங்கை தமிழரிடையே சுயமரியாதை என்ற சொல்லே ஒலிப்பதில்லை
ஆனால் 1927 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை என்ற தலைப்பில் சில ஆண்டுகள் ஆசிரியர் தலையங்கம் திராவிடன் பத்திரிகையில் வந்திருக்கிறது .. அந்த காலங்களில் சுயமரியாதை என்ற கருத்து ஒலித்திருக்கிறது.

Sunday, October 2, 2022

இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் U N P என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை tamil translation 02 May 1947 by J.R.Jayavardana


ராதா மனோகர்
:
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா 1947 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களின் ஐக்கிய தேசிய கட்சி பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரை பல வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது.

விருப்பு வெறுப்புக்களை கடந்து உண்மையான வரலாற்று செய்திகளை இக்கட்டுரை ஓரளவு எடுத்து காட்டுகிறது .
முக்கியமாக இலங்கையில்  இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு பற்றிய பல பின்னணி நிகழ்வுகள் இதுவரையில் பொதுவெளிக்கு உரியமுறையில் வந்து சேரவில்லை.
அன்றைய காலக்கட்டங்களில் இலங்கையில் கம்யூனிச ஆபத்து உருவாகிய பின்னணியும் அதில் இந்திய இடது சாரிகளின் பங்கு என்ன  என்பதும் அறியவேண்டிய விடயமாகும்

இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இந்திய வம்சாவளி மக்களை மாற்றிய  தொழிற்சங்கங்களும் கட்சிகளும் ஆற்றிய பணிகள் பற்றி அறிவதற்கு இக்கட்டுரை கொஞ்சம் உதவும் என்று எண்ணுகிறேன்
இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் UNP  என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை  -
1947 UNP Party  Journal -President J.R.Jayavardana : :
இலங்கை சம சமாஜ கட்சியின் தலைவர்களான  டாக்டர் கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் திரு.எஸ்.சி.சி.அந்தோனிப்பிள்ளை ஆகியோர் தென்னிந்தியாவின் (கோயம்புத்தூர் பெரிய துணி  ஆலைகளில் ஒன்றின் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக அங்கு  கைது செய்யப்பட்டனர்.
இந்த  செய்தி ஒரு முக்கியமான செய்தியாகும்.
இவர்களின் வேலைநிறுத்தம் பற்றிய விபரத்திற்குள் நாம்  செல்வதை விட வேறு கோணத்தில் இதை நோக்கவேண்டும்