ஈழநாடு 7 - 6- 1961 யாழ்ப்பாணம்
தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி ( திரு அல்பிரட் துரையப்பா) நடவடிக்கை
தமிழ் பேசும் பிரதேசங்களில் ஒரு கவின் கலைக்கல்லுரியும் ஆயுர்வேத வைத்திய நிலையமும் வானொலி நிலையமும் நிறுவப்பட இருக்கிறது.
இவைகள் இந்த ஆண்டு அல்லது அடுத்த நிதியாண்டுக்குள் நிறுவப்படலாம்.
இதற்கான
நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன் என்று யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட்
துரையப்பா பத்திரிகைக்கு விட்டுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
திரு அல்பிரட் துரையப்பா அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்
மொழி உரிமைக்காக போராடிவரும் அதே வேளையில் எமது தேவைகளையும் எமக்கு
கிடைக்க கூடிய உதவிகளையும் உரிமையோடு பெற்று கொள்வது அவசியமாகும்
கிடைக்கக்கூடிய உதவிகளை கைவிடாது நமது நாட்டின் தேவையை பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகும்
அவர் தமது தொகுதிக்கு இவ்வாண்டில் செய்து முடிக்கவிருக்கும் வேலைகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அவையாவன:
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Friday, July 29, 2022
தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் துரையப்பா!
Wednesday, July 27, 2022
யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலி கட்டுரை
யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலியாக இந்த கட்டுரை
திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ் மேயர் பதவி கால சாதனைகளை மக்கள் அறிந்திருக்கும் அளவுக்கு அவர் யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றிய வரலாறு பொதுவெளிக்கு மறைக்க படுகிறது அவை இனி ஒவ்வொன்றாக வெளிவரும் அந்த வகையில் வெளிவரும் முதல் செய்தி இதுவென்று எண்ணுகிறேன் .
.jpg)
ஈழநாடு 18 - 3- 1961 யாழ்ப்பாணம்
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு முதல் வெற்றி!
சத்தியாகிரக எம்பிக்களுக்கு 3 மாத ரஜா (அதாவது விடுமுறைங்கோ ஹரிஹர சர்மாவின் தமிழ் இதுதானுங்கோ)
சத்தியாகிரகம் செய்யும் தமிழரசு கட்சி எம்பிக்களுக்கு பார்லிமெண்டு சபை இவ்வாரம் மூன்று மாத ராஜா அளித்திருக்கிறது
அவர்களுக்கு இந்த ராஜாவை கொடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண தொகுதி பிரதிநிதி திரு அல்பிறெட் துரையப்பா (சுயேட்சை) ஒரு பிரேரணையை கொணர்ந்தார்.
Monday, July 4, 2022
எமில் சவுந்தரநாயகம் ! திரைப்படங்களை விட கவர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்த தில்லுமுல்லு வரலாறு! .. இலங்கை தமிழர்
![]() |
![]() |
ராதா மனோகர் : திரு.எமில் .சவுந்தரநாயகம் (6 July 1923 – 21 December 1976) இலங்கை தமிழரான இவர் ஐம்பது அறுபதுகளில் ஐரோப்பாவையும் கடந்து உலகையே கலக்கிய ஒரு மோசடிக்காரன் இவரது முழுபெயர் (Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam ).இவரது மனைவி பெயர் புஷ்பம் .இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக தெரிகிறது .. இவரின் மோசமான நடவடிக்கைகளால் இவரது குடும்பம் வாழ்க்கை முழுவதுமே தலைமறைவாக வாழவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றைய பிரித்தானிய யுத்த அமைச்சர் ஒரு பெண் உளவாளியோடு தொடர்பு கொண்டிருந்தமையால் பிரித்தனிய அரசே கவிழ கூடிய நிலை உருவானது , அந்த பெண் உளவாளி எமில் சவுந்தர நாயகத்தில் பணத்தில் பிரித்தானிய அமைச்சரை வேவு பார்த்ததாக நம்பபட்டது, அதில் அந்த அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார், எமில் தப்பி விட்டார்,
இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 24 வயது நிரம்பிய எமில் சவுந்தர நாயகம் அங்கு வர்த்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் .ஆனால் அதில் வெற்றி பெறமுடியவில்லை, அந்த இளம் வயதிலேயே இவருக்கு சர்க்கரை நோய் தாக்கியது, நிரந்தரமாகவே இன்சுலின் பாவிக்கும் அளவுக்கு சர்க்கரை நோய்க்கு ஆட்பட்டிருந்தார். பிரிட்டிஷ் விமான படையில் சேர்வதற்கு முயற்சித்தார். இரண்டாவது உலக யுத்தம் காரணமாக அது கைகூடவில்லை.
சிங்கள மொழியானது பார்பனீயத்திடம் இருந்த பௌத்தத்தை பாதுகாத்த ஒரு மொழி!
ராதா மனோகர் : இலங்கை பொலநறுவை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில் நிசங்க மன்னரின் ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர் இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில் 3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக 7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.
இதன் எழுத்துக்களின் மீது உலோக துகள்கள் படிமங்களாக இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது
சிங்கள மொழியானது இலங்கை முழுவதும் வட்டார பேதங்கள் இன்றி பேசப்படுவதற்கும் எழுதப்படுவதற்கும் ஆதாரமாக இந்த கல் புத்தகம் இருக்கிறது என்று கருதப்படுகிறது
Sunday, July 3, 2022
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை பறிப்பின் பின்னணியில் இந்திய அரசும் அரசும் இருந்திருக்கிறதா?
ராதா மனோகர் : இலங்கை தமிழர் அரசியலில் மீண்டும் மீண்டும் ஒரு பெரிய பொய்யை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்
திரு செல்வநாயகமும் திரு நாகநாதனும் கதை வசனம் எழுதி அரங்கேற்றிய இந்த நாடகம் இன்றுவரை தொடர்கிறது
திரு சுப்பையா பிள்ளை நடேச பிள்ளை என்றவரில் இருந்து பல விடயங்களை நோக்க வேண்டி உள்ளது
எல்லோரும் வசதியாக இவரை மறந்து விட்டுத்தான் அரசியல் வரலாறு பற்றி பேசுகிறார்கள் அல்லது கதை அளக்கிறார்கள்.
இவர் காங்கேசன் துறை எம்பியாக சுதந்திரத்திற்கு முன்பு இரு தடைவைகள் இருந்தார்
சுதந்திரத்திற்கு பின்பு 1952 இல் காங்கேசன் துறை தொகுதியில் இருந்து செல்வநாயகத்தையே தோற்கடித்து எம்பியானார் . அதன் பின்பு ஐக்கிய தேசிய கட்சி அரசில் அமைச்சரானார்
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் . ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனை நிகழ்ச்சி நிரலிலும் பங்கு பற்றியவர்.
இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் அங்கு நகராட்சி கவுன்சிலராகவும் இருந்தவர் இவர் சேர் பொன்னம்பலம் ராமநாதனின் மருமகனாகும்
மேலும் இவர் இலங்கை அமைச்சராக இந்தியாவுக்கு சென்று யாழ்ப்பாண புகையிலை வர்த்தக தடையை நீக்குமாறு கேட்டுக்கொண்டு அதை சாதித்தவர்
இதுவரை காலமும் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை நீக்கம் பற்றி இவரது பங்கு பற்றி எவரும் ஏன் குறிப்பிடுவதில்லை?
Friday, July 1, 2022
இலங்கை திராவிட முன்னேற்ற கழக தடைக்கு எதிராக திரு அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
ராதா மனோகர் : . 22.07.1962 இல் ஆட்சியில் இருந்த ஸ்ரீ மாவோ தலைமையிலான அரசு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை தடை செய்வதாக அறிவித்தது . இந்த தடைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். வவுனியா எம்பி சிவசிதம்பரம் உட்பட பலர் இதை கண்டித்து உரையாற்றினார்க்ள
திரு அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்
...
"இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க
வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி, அவர்களுடைய
மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று, அவர்களும் இந்த
நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற ஒரே
இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக்
கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு
முரணானது! மனித உரிமைக்கு மாறானது என்பதைக்
கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தக் கழகம் மேற்கொண்ட
எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது
என்பதை அரசாங்கத்திடமிருந்து நான் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன்.