Tuesday, April 12, 2022

இலங்கை பகுத்தறிவு இயக்கம் 1959 வரலாற்று பதிவு

 ராதா மனோகர் :  7 - 5 - 1959 -  எஸ் டி சிவநாயகம் - சுதந்திரன்:
கலப்பு திருமணம்  செய்வோருக்கு நிதி உதவி
பகுத்தறிவு இயக்கம் மேற்கொண்டுள்ள முடிவு
சாதி ஒழிப்புக்கு கலப்பு திருமணம் எவ்வளவு உபயோகமானது என்பதை பொதுமக்களுக்கு எடுத்து விளக்குவது என்றும் கலப்புத்திருமணம் செய்ய முன்வரும் ஆண் பெண் இருபாலாருக்கும் ஊக்கம் அளிப்பதோடு வேண்டிய உதவி புரிவதென்றும் அகில இலங்கை பகுத்தறிவு இயக்கம் தீர்மானித்துள்ளது.
மேற்படி இயக்கம் வெளியிட்டுள்ள நிர்வாக அறிக்கையில் பிரஸ்தாப தீர்மானம் இடம் பெற்றிருக்கிறது
அறிவுப்பணி புரிவதை இலக்காக கொண்டு மட்டக்களப்பில் அரும்பிய பகுத்தறிவு இயக்கம் 1956 இல் பல ஊர்களிலும் வேரூன்றி தழைத்த வரலாறும்,
அடுத்த வருடத்தில் எல்லாவற்றுகுமாக தலைமை கழகம் ஒன்று உருப்பெற்ற விபரமும்.

அன்று சிலரோடு இருந்த இயக்கம் இன்று மொத்தம் 2190 உறுப்பினர்களை கொண்டு பெரும் சக்தியாக திகழும் தகவலும் நிர்வாக அறிக்கையில் தரப்பட்டிருக்கிறது.
 இன்னும் சமூக சீர்திருத்தம் சாதி ஒழிப்பு ஆகிய துறைகளில்
இயக்கத்தின் சாதனைகளும் கொள்கை விளக்கமும் நடைபெற்ற நிகழ்ச்சி குறிப்புக்களும் நடக்கவிருக்கும் வேலைத்திட்டங்களை தரப்பட்டிருக்கின்றன .

Sunday, April 10, 2022

இலங்கை அருந்ததியர் சங்கமும் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் .. வரலாறு 9 - 11 - 1957

 சுதந்திரன்  :  யாழ் நகரில் இலங்கை திராவிட முன்னேற்ற கழக மாநாட்டில் அகில இலங்கை அருந்ததியர் சங்கம் கலந்து கொள்கிறது
அகில இலங்கை அருந்ததியர் சங்க கமிட்டி கூட்டம் சென்ற 9 - 11 - 1957 ல் கொழும்பு கிரீன்ஸ் லேனில் உள்ள சங்க காரியாலயத்தில் திரு . மா மு. இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது
அவ்வமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 . திரு நல்லையா செனட்டராக நியமிக்க பட்டதற்கு இச்சங்கம் தனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறது
2 . தமிழ் சமூகமெங்கு புரையோடி போயிருக்கும் தீண்டாமை தொழு நோயை வேரறுக்க யாழ் நகரில் இலங்கை

திராவிட முன்னேற்ற கழகம் டிசம்பர் 28 - 29 ஆகிய நாட்களில் நடத்தும் சமூக சீர்திருத்த மாநாட்டை இச்சங்கம் வரவேற்பதோடு பொதுச்செயலாளர் ஏ சுந்தரராசனின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவொன்றையும் அனுப்புவதென தீர்மானிக்கிறது  

3 -  கொழும்பு முழுவதற்கும் வட்டார கமிட்டி உறுப்பினர்கள் தெரிவு செய்து  அருந்ததிய மக்களை சங்க அங்கத்தவர்களாக்குவதற்கும் சங்கத்தின் சார்பில் பத்திரிகை வெளியிடுவதற்கும்   திருவாளர்களான பெ கி .சண்முகம் ,  மா செ .அருள் . சே சேதுபதி , சே. சங்கர் ஆகியோரை கொண்ட கமிட்டி ஒன்றும் நிறுவப்பட்டது

இலங்கை சுயமரியாதை இயக்க முன்னோடி எஸ் டி சிவநாயகம்

ராதா மனோகர் : அமரர் எஸ் டி சிவநாயகம்

RM.veerappan S.Rasathurai S.T.sivanayakam
இலங்கை பகுத்தறிவு கழக முன்னோடி
மட்டக்களப்பு பகுத்தறிவு கழக நிறுவனர்
இலங்கை திராவிட இயக்க முன்னோடிகளில் முக்கியமானவர்
அமரர் எஸ் டி சிவநாயகம் அவர்களின் மிக நெருங்கிய நண்பர் திரு செல்லையா ராசதுரை (முன்னாள் அமைச்சர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் திரு எஸ் டி சிவநாயகம் பற்றி சில நினைவுக
ST.Sivanayakam Manavai Thambi Nedunchezhiyan

ளை காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் திரு ந.வித்தியாதரனிடம் பகிர்ந்திருந்தார்   
அதில் இருந்து சில பகுதிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
எனக்கு இப்போது வயது 95 . அந்த தலைமுறையில் தந்தை செல்வா , வன்னியசிங்கம். ராஜவரோதயம் போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகியவர்களில் நான் மட்டும்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நினைக்கிறேன்
எஸ் டி சிவநாயகம் அண்ணன் குறித்து நினைவுகளை மீட்க எனக்கும் பல விடயங்கள் உண்டு. 
ஆனால் என் வயது மூப்பு காரணமாக என்னால் பல விடயங்களை எழுதி அனுப்ப இயலவில்லை . உங்களுடன் பேச்சில் பரிமாறிக்கொள்கிறேன்.

திமுகவின் பொதுத்தேர்தல் இலாக்கா (சுதந்திரன் - 1954 ஒக்டோபர் 10 ) எஸ் டி சிவநாயகம்

சுதந்திரன் (இலங்கை) - 1954 ஒக்டோபர் 10 திராவிட முன்னேற்ற கழகத்தின்

எதிர்கால பொதுச்செயலாளர். திரு இரா நெடுஞ்செழியன் இலங்கை விஜயம் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றுவார் திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்கால பொதுச்செயலாளரும் மன்றம் மாதமிருமுறை இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு இரா.நெடுஞ்செழியன் எம் ஏ இம்மாதம் 14 ஆம் தேதி கொழும்பு வருகிறார்
சுமார் பத்து தினங்கள் இலங்கையில் தங்கும் நெடுஞ்செழியன் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில்
முத்தமிழ் , இலக்கிய இன்பம் , புரட்சி கவிஞர் என்ற மூன்று தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவர் என்றும்.


கொழும்பு திராவிட முன்னேற்ற கழக ஆதரவில் மருதானை கிண்னெர்ஸ் ரோட் அரசினர் பாடசாலை மண்டபத்தில் 24 ஆம் தேதி ஒரு இயக்க சொற்பொழிவாற்றுவர் என்றும் தெரிகிறது.
கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழா வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் இம்மாதம் 15. 16 . 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.

திரு நெடுஞ்செழியன் இலங்கையில் நிற்கும் காலை இலங்கையின் பல பாகங்களுக்கும் சுற்று பிரயாணம் செய்து இடங்களையும் திமுகவின் வளர்ச்சியையும் பார்வையிடுவார்.