துணை தலைவர் அவர்களே!
நான் பாராளுமன்றத்தில் இறுதியாகப் பேசிய பின்,
இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,
இலங்கைத தமிழ் மக்களின் பிரதான அரசியற் கட்சியின்
செயலாளர் நாயகமும் ஆன திரு. அமிர்தலிங்கம் யாழ்ப்
பாணத்திலிருந்து டெல்லி வந்தார்.
அவர் என்னைச் சந்தித்தார்.
வெளி நாட்டு அலுவல்கள்
அமைச்சருடனும், ஏனைய
அமைச்சர்கள் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்
படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடனும்
பேசினார்.
![]() |
| திரு அமிர்தலிங்கம் தம்பதிகள் |
இலங்கையில் சிறுபான்மைச் சமூகம் மிருகத்தனமான
தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டதைப் பற்றி நெஞ்சைத்
தொடும் விவரங்களைத் தந்திருக்கிறார். இங்கு பேசிய
உறுப்பினர்கள் போலவே நான் தனிப்பட்ட முறையிலும், எனது
அரசாங்கமும் எனது கட்சியும் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற இனக்கொலை,
துன்பம், அந்தி ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம்.
ஆனால் எமது உணர்ச்சி எவ்வளவு ஆழமாக இருந்தாலும்
அரசாங்கம் கூடிய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டி இருக்கின்றது.
ஏனெனில் நாம் விருப்பமின்றியோ தயக்கமாகவோ,
இருப்பதால் அல்ல, ஆனால் நாம் ஒவ்வொரு அடி எடுத்து
வைக்கும் போதும் எமது சொற்கள், எமது செயல்கள் இலங்கைத்
தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்குமா இன்றேல் தீமை
பயக்குமா என்று யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்த இடத்தில், இலங்கையில் தனக்கு மனக் கவலையும்
வெறுப்பும் ஏற்பட்ட போதும், என்னுடனும் ஏனையோருடனும்
நடந்த உரையாடல்களில் திரு. அமிர்தலிங்கம் காட்டிய
அரசியல் ஞானத்திற்கு என் உயாந்த பாராட்டை நான்
தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது கட்சியின் சார்பில் எமது
நல்லெண்ணச் சேவையைத் திரு அமிர்தலிங்கம் வரவேற்றுள்வார்.









































